(Reading time: 19 - 37 minutes)
Em mathamum sammatham
Em mathamum sammatham

என்று கேள்வி கேட்டார் இன்ஸ்பெக்டர் . 

அதை நீங்க டாக்டர்கிட்டத் தான் கேக்கணும் இன்ஸ்பெக்டர்!" என்றார் ஜாபர் .

"டாக்டர் எங்கேயிருக்காங்க?"

"அவங்க இப்பத்தான் உள்ள போனாங்க, இப்ப வருவாங்க."

"சரி , டாக்டர் வரதுக்குள்ள சொல்லுங்க , எப்டியாச்சு, யார் எங்கேர்ந்து கத்திய வீசினாங்க?"

"அது, அவங்க தான் கூட இருந்தாங்க, இவன் என் மகன் அப்துல், அது அவன் மகன், அஜய், அவங்க தான் கூட இருந்தாங்க, அவங்கதான் இங்க கொண்டுவந்து அட்மிட் பண்ணாங்க. நீங்க அவங்களையே கேளுங்க" என்று ஜாஃபர் கை காட்டி விட்டார்.

அஜய்த்தான் அங்கு நடந்ததை விவரமாக கூறினான். " நீங்க அவங்க ஹஸ்பண்ட்தானா அப்ப நீங்க எங்க இருந்தீங்க?"

"நான் தூங்கிட்டிருந்தேன் இன்ஸ்பெக்டர், அஜய் கத்தினவுடனே ஓடி வந்தேன். அப்பத்தான் என் மகன், என் மனைவியை தூக்கிக் கொண்டு காருக்கு போனான். " என்று விரிவாக கூறினான்.

'அப்போ யாருமே கத்தி எறிந்தவன பாக்கல?"

'இல்ல இன்ஸ்பெக்டர்." என்றனர் அப்துலும், அஜயும்.

ஜாஃபர் இடை புகுந்து " உங்களோட தனியா கொஞ்சம் பேசணும் இன்ஸ்பெக்டர்!" என்றார்.

"வாங்க பேசலாம்!" என்று ஜாஃபரை அழைத்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் போனார்.

வெளியே ஒரு தனியிடமாக நின்று பேசினார்கள் . ஜாஃபர், ஆமீராவுடைய அண்ணன் வந்து தகராறு பண்ண விஷயத்தை கூறினார், பிறகு அப்துல் தனத்தை பற்றியும் கூறினார்.

"இவ்வளோ விவகாரமா இருக்கு உங்க மகன் பிரச்சனைல?" என்று கேட்டு கொஞ்சம் யோசித்தார் இன்ஸ்பெக்டர்.

"அப்போ அவங்கதான் செய்ஞ்சிருப்பாங்கண்டறீங்க?"

"அதுல எனக்கு சந்தேகமேயில்லை இன்ஸ்பெக்டர், அவங்களுக்கு இன்னும் இந்த மத விவகாரம் தெரியாதுன்னு நான் நினைச்சிண்டிருக்கேன், ஆனா இப்போ அவங்க வீடு வரையிலும் போய், இவ்ளோ தூரம் அவங்க செய்ஞ்சது எனக்கு அச்சத்தை கொடுக்கறது." என்று கவலையுடன் கூறினார் ஜாஃபர்.

"நீங்க சொல்றதெல்லாம் யோசிச்சு பார்க்கறப்போ அவங்க செய்திருப்பாங்கன்னுதான்

தோணறது, சரி அவங்க அட்ரஸ் போன் நம்பரெல்லாம் கொடுங்க நான் விசாரிக்கறேன்."

"தேங்க்ஸ் இன்ஸ்பெக்டர்!"

"இது எங்க டூயுட்டி ஜாஃபர் சார்!" என்றார் இன்ஸ்பெக்டர் .

அவர்கள் உள்ளே போனதும், டாக்டர் அங்கு வந்தார், அவரிடம் இன்ஸ்பெக்டர் விசாரித்தார், "பேஷண்ட பார்க்கலாமா டாக்டர்?"

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.