(Reading time: 19 - 38 minutes)

சூர்யா "குட். நான் டாக்டர மீட் பண்ணி அர்ஜுனையும் பார்க்கிறேன். அப்படியே அவன்   ஷீஸர் பத்தி என் ஒபினியன சொல்றேன். நீங்க முதல பஸ்ட் எயிட் க்கு பாருங்க. என்னை டாக்டர்ன்னு பார்மலா சொல்லாம பேர் சொல்லியே கூப்பிடலாம்" 

 

சந்தியா அதற்கு "சரி. நான் சின்ன பொண்ணு தானே..நீங்களும்  நீ வான் னே கூப்பிடலாம்"

 

சூர்யா "சந்தடி சாக்கில நான் வயசானவன்னு சொல்றீங்களே " என்றான் லேசான புன்னகையுடன்.

 

சந்தியா "தோடா.. யூத்து" என்று அவள் இழுத்து சொல்ல இருவரும் சிரித்து விட்டு, சூர்யா அர்ஜுனின் டாக்டரையும், சந்தியா வரவேற்பில் இருந்த பெண்ணையும் பார்க்க சென்றனர்.

 

அப்போது அர்ஜுனின் மருத்துவர் நோயாளிகளை பார்வையிட வெளியே வர, சூர்யா அவரிடம் தன்னை அறிமுகம் செய்தவாறே  அர்ஜுன் இருந்த அறைக்கு  சென்றனர். சிறிது நிமிடங்கள் அர்ஜுனை பற்றி பேசி விட்டு அவர் விடை பெற்றார்.

 

அங்கு இருந்த முதியவர் அருணகிரி சூர்யாவிடம் பேசினார். "நான் அன்பு இல்லம்ன்னு ஒரு அனாதை இல்லம் நடத்திகிட்டு இருக்கிறேன்.  எங்க இல்லத்து பிள்ளைங்கள யாரையும் சந்தியா அனாதைன்னு  சொல்ல விடமாட்டா. அவளும் அவங்களை அப்படி சொல்ல மாட்டா. அவளுக்கு இந்த பிள்ளைங்க இன்னைக்கு நேத்து இல்லப்பா பத்து வருஷ பழக்கம்.  அதுவும் அர்ஜுன் மேல ரெம்ப பாசம். எவ்ளோ பாசம் இருந்தா  இப்படி ஆறு வயசு பிள்ள பேச்சைக் கேட்டு இப்படி பதறி ஓடி வந்திருப்பா...இந்த பொண்ணு உங்களையும் பதற வச்சுட்டாளே. டாக்டர் ஐ பாத்து பேசிட்டு வாறேன்ட்டு போனா. இப்போ வந்துடுவா. பெரிய இடத்து பிள்ளை கவுரவம் பாக்காம இவ்ளோ தூரம் வந்ததுக்கு ரெம்ப நன்றிப்பா"  என்றார்.

 

அர்ஜுன் இப்போது சற்று தெளிச்சி அடைந்து சூர்யாவிடம் பேசினான்.

 

வரவேற்பு பகுதியில், வரவேற்பாளரான அந்த பெண்ணின் முகம் அழுது வீங்கி இருந்தது. அவள் அங்கு சந்தியாவிற்கு நடந்த சம்பவங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள். அவள் சந்தியாவை பரிதாபமாக பார்க்க, சந்தியா அந்த பெண்ணின் அழுத முகத்தை பரிதாபமாக பார்க்க, சந்தியா பேச்சை தொடங்கினாள். "எனி ப்ராப்ளம்? உங்க பேரு என்ன?" என்றாள். "என் பேரு சுஜி. எனக்கு உங்களை அடிச்சவறால தான் ப்ராப்ளம்" என்றாள் சோகத்துடன்.

 

"ஏன்? கார்த்திக் உங்களையும் அடிச்சாரா?" என்றாள் சந்தியா.

 

"யாரு கண்டது. அடிச்சாலும் அடிச்சிருப்பாரு. நடுவுள இந்த டேபிள் இருந்ததுனால தப்பிச்சேன்னு நினைக்கிறேன். எல்லாம் பணக்கார திமிர்" கார்த்திக் மேல் இருந்த கடுப்பில் சற்று மிகைப்படுத்தி சொன்னாள் சுஜி. பின் அவள் கார்த்திக்குடன் பேசியது அதன் பின் அவளை அந்த கணக்கர் அனைவரின் முன் அவளை திட்டியதையும் சொன்னாள். அவள் வேலைக்கு வந்து இரண்டு வாரம் தான் ஆகிறதாகவும் ஏற்கனவே அந்த கணக்கர் எப்படியாவது அவள் வேலையை விட்டு தூக்கி அந்த இடத்தில் தனது உறவினரை அமர்த்த முயற்சிப்பதாகவும் இந்த சம்பவம் அதற்கு தோதாக இருக்கும் என சந்தியாவிற்கு மட்டும் கேட்கும் குரலில் ரகசியமாக தன் கவலையை  கூறினாள். அந்த நேரம் அந்த கணக்கர் அங்கு இல்லை.

 

அதை கேட்ட சந்தியா சுஜிக்கு உதவி செய்து அதே நேரத்தில் தனது காரியத்தையும் சாதிக்க திட்டம் போட்டாள். அவள் மனதிற்குள் "கார்த்திக் நீ அத்தனை பேரு  முன்னாடி சுஜிட்ட கத்தி, என்ன அடிச்சி உன்னோட இமேஜ்ஜ கிழிக்க நீயே கிரௌண்ட் வொர்க் பண்ணி கொடுத்திட்ட. அடி வாங்கினதுனால அனுதாப அலையில் அத்தனை வோட்டும் எனக்குத் தான். நான் என்ன சொன்னாலும் நம்பிடுவாங்க. " என்று எண்ணி கொண்டாள்.

 

சுஜி பேசிய பிறகு சந்தியா,  "யாரோட பாவமோ சாபமோ  தெரியல கார்த்திக்குக்கு இருக்கிற நோய்னால எத்தனை பேருக்கு கஷ்டம்... " என்று ஓ வென்று அழுதாள்... அழுவது போல நடித்து சுஜி மட்டுமல்லாது அங்கிருந்த அத்தனை பேரின் கவனத்தை ஈர்த்தாள். சுஜி, "என்ன அக்கா சொல்றீங்க? அப்படி  என்ன நோய்?"

 

"அது...அது வந்து ... ஒரு மன நோய்...நீங்க மூணு படம் பாத்து இருக்கீங்களா?" என்றாள் சந்தியா.

 

"இல்ல அக்கா.. எனக்கு தனுஷ்னா ரெம்ப பிடிக்கும். அதுல தனுஷ் கழுத்தை அறுத்து சாகுறது கொடுமையா இருக்குமாம்...அதான் பாக்கல " என்றாள்.

உடனே சந்தியா கார்த்திக் அவன் கழுத்தை கத்தியால் கீறுவது போல் நினைத்து பார்த்து, "சீ ..சீ.. வேண்டாம் கார்த்திக் நீ சூசைட் பண்றத நினச்சா பரிதாபமா இருக்கு. உனக்கு அந்த கேரக்டர் சூட் ஆகாது. நீ நல்லா வாட்ட சாட்டமா இருக்க. உனக்கு அந்நியன் விக்ரம் தான் கரெக்ட்" என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு அருகில் ஓபி டோகென் கொடுக்கும் பெண் வேக வேகமாக வந்து,

 

"அக்கா, மூணு படம் நான் பாத்து இருக்கேன்.. அந்த அண்ணன் அப்படித் தானா... பாவம் " என்றாள்.

 

இவர்கள் பேச்சை கேட்டு கொண்டிருந்த ஓபி நோயாளிகள் அமரும் பகுதியில் இருந்த பெண்மணி அருகில் இருந்தவரிடம் "அவன பாத்தவுடனே எனக்கு தோணுச்சு.. அவனுக்கு எதோ பிரச்சனைன்னு. பெரிய இடத்து பிள்ளைல அதான் வெளில தெரியாம மூடி மறைச்சிடுறாங்க " சொல்லிக்கொண்டு இருந்தது சந்தியாவின் காதில் விழ

 

"பார்ரா... இன்னும் டைட்டில்லே போடல.. அதுக்குள்ள கத சொல்ல ஆரம்பிச்சிட்டாங்களே" என்று நினைத்துக்கொண்டே, சுஜியையும், டோகன் கொடுக்கும் பெண்ணையும் பார்த்தபடி சந்தியா "இல்ல.. கார்த்திக் எக்ஸ்ஆக்ட்டா அப்படி இல்ல.. அவர் ஸ்ப்லிட் பெர்சனாலிட்டி.  அதை எப்படி சொல்ல.. ம்...அந்நியன் படம் பாத்து இருக்கீங்களா ?"

 

அவர்கள் இருவரும் தலையாட்ட, சுஜி, "தெரியும் அக்கா. அவங்கள அறியாமலே வேற ஆள் மாதிரி நடந்துக்குவாங்க. இவரும் தப்பு பண்ணா அந்நியன் மாதிரி  மாறிடுவாரோ..ஏன்னா நான் சரியா பதில் சொல்லன்னு தான் கோபப் பட்டாரு." என்றாள். சந்தியாவிற்கு கார்த்திக்கின் கோபத்தின் காரணம் அவளின்  அழைப்பு எண்ணை அவளிடம் கொடுக்காததே என்பது தெளிவாக தெரிய, அவள் சுஜியிடம் "நீங்க போன் பத்தி ஏதாவது பேசுன்னீங்களா ?" என்றாள்.

 

அதற்கு சுஜி "அட ஆமா.. அவங்க ப்ரண்ட்க்கு போன் போட சொன்னேன்.. ஏன் போன் பேசுறது பிடிக்காதா?" என கேட்க, சந்தியா அதற்கு "ஆமா.. கரெக்ட்டா சொன்னீங்க போங்க.. போன்அப்படின்னு சொன்னாலே அவரு வெறி பிடிச்ச மாதிரி கிட்டத்தட்ட அந்நியன் மாதிரி மாறிடுவாரு."

 

இப்படி சந்தியா கார்த்திக்கின் பெயருக்கு சமாதி கட்டி கொண்டிருந்த நேரம், அர்ஜுனும் அருணகிரியும் சந்தியாக்கு கோவில் எழுப்பி கொண்டிருந்தனர். முன்புலத்தில் கட்டுக்கதையும் , பின்புலத்தில் உண்மைகதையும் ஓடிகொண்டிருந்தது.

 

சூர்யா "ஸ்பெஷல் டையட் சிலருக்கு தான் வொர்க் அவுட் ஆகும். அர்ஜுனுக்கும் அது நல்லா  ஹெல்ப் பண்ணுதுன்னு நினைக்கிறேன். இந்தியால இத பத்தி தெரிஞ்சிருக்குனா ஆச்சர்யம் தான். உங்களுக்கு எப்படி தெரியும்?"

 

அருணகிரி அதற்கு, "எல்லாம் சந்தியாவோட முயற்சி, அர்ஜுன்க்கு வலிப்பு வரும் போது  ரெம்ப கஷ்டபடுவான். சந்தியா அத பாத்தா நைட் எல்லாம் தூங்க மாட்டா. ஏதாவது வழியிருக்கான்னு அவளா இன்டர்நெட் எல்லாம் உருட்டி அவனுக்காக  பாத்து சொன்னது தான்." என்றார்.

 

அர்ஜுன், "சந்து அக்கா எங்களுக்கு ரெம்ப பிடிக்கும். நான் ரெண்டாவது படிக்கும் போது முதமுதலா இல்லத்திற்கு வந்தாங்க. அவுங்க கணக்குல புலி. அவுங்க புக்ஸ் எடுத்திட்டு இங்க வந்து படிச்சிகிட்டே எங்களுக்கு எல்லா பாடமும் டியூஷன் எடுப்பாங்க.  என்னோட சேர்த்து இன்னும் ஐந்து பேரு இந்த வருஷம் +2 போறோம். எங்களை  IIT மாதிரி இந்தியாலே  பெஸ்ட் காலேஜ்ல சேர்த்து நல்லா உருவாக்கணும்ன்னு அக்காவுக்கு ஆசை. அதுக்காக நாலு வருஷமா எங்களுக்கு ப்ராக்டிஸ் கொடுத்து கிட்டு இருக்காங்க. நெறைய ட்ரைனிங் மெடீரியல்ஸ், எச்பெர்ட்ஸ் எல்லாம் கூட கூட்டிட்டு வந்து எங்களை  ட்ரைன் பண்ணி இருக்காங்க. அவங்க எங்களுக்கு அம்மா, அப்பா, அக்கா, ப்ரண்ட் ன்னு எல்லாமாவும் இருப்பாங்க. " என்று சொன்னான்.

 

அருணகிரி அர்ஜுனை பார்த்த படி, "இவன் தான் பத்தாவதுல ஸ்டேட் பர்ஸ்ட். அப்போ சந்தியா MBA படிக்க போய்ட்டா.  இந்த தடவை +12 க்கு கண்டிப்பா கூட  இருப்பேன்ட்டு வெளியூர்ல வேலைக்கு போகாம இங்கயே இருக்கிறா. அவங்க வீட்லயும் கல்யாண பேச்சை எடுக்க கூடாதுன்னு இதுக்காகவே ஒரு வருஷத்திற்கு தடை போட்டிருக்கா. இது என்ன அவ தனி மனுஷியா இந்த இல்லத்துக்கு எவ்ளோ காசு கொடுத்துருக்கா தெரியுமா? என்ன.. எப்படின்னு கேட்டா இது நியாயமா உழைத்து  சம்பாதிச்சதுன்னு  சொல்லி  எங்க வாய அடச்சிடுவா"

அதை கேட்ட சூர்யா ஆச்சர்யத்துடன் "இந்த வயசுல சந்தியா இவ்ளோ பண்றாளா? அவளை  பாத்தா அப்படி தெரியலையே " என்றான். அதற்கு அர்ஜுன் மேலும்  "அவுங்க செய்றது யாருக்குமே தெரியாத படி நடந்துக்குவாங்க. அவுங்க இன்னும் நிறைய செய்றாங்க. எதையும் எங்கள்ட்ட கூட சொல்லமாட்டாங்க. " என்றான்.

 

சூர்யா மனதுக்குள் சந்தியா கோபுரமாய் உயர்ந்து நின்றாள். பின், சூர்யா கார்த்திக்கை  போனில் அழைத்து அவளை காயப்படுத்தியதிற்கு நன்றாக வசவு மழை பொழிந்தான். கார்த்திக் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. போனை வைக்கும் முன் கார்த்திக்  ஒரு கோரிக்கையை  மட்டும் அவனிடம் விடுத்து விட்டு வைத்தான்.

 

மருத்துவமனை வரவேற்பு பகுதியில் சந்தியா தன் கட்டுக்கதையை சொல்லிக் கொண்டிருக்கும் போது அங்கு தரையை சுத்தம் செய்த வயதான மூதாட்டி அவளருகில் வந்து "நீ சொல்ற பையன் எம்சியாரு மாதிரி சோக்கா இருந்தான். அவனுக்கா நோய்ன்கிற?" என்று கேட்க "ஹூம்.. கிழவி இந்த வயசுலயும் என்னம்மா சைட் அடிக்குது.. அவன் வாத்தியாரு மாதிரி தெரியுதா?" என்று நினைத்துக் கொண்டே "ஆமா பாட்டி என்ன இருந்து என்ன பிரயோஜனம்? அவர்  ஸ்ப்ளிட் பெர்ஸ்னாளிட்டி" என்றாள்.  

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.