(Reading time: 19 - 38 minutes)

ந்த பாட்டிக்கு ஒன்னும் புரியாமல், "என்ன பர்சு...ஓ  ...டீ யோ.. நான் சொல்றத கேளு. வயசு பையன், எங்கயாவது ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில தனியா போயிருப்பான். மோகினி பிசாசு கிசாசு ஆட்டம் காட்டியிருக்கும். அதான் பயந்திருக்கான். இந்த அம்மன் நகர்ல திருநீறு போடுறவரை  எனக்கு தெரியும். அவர்ட்ட கூட்டு போ. பையன் தெளிஞ்சிடுவான். நீ அவனுக்கு சொந்தமா?" என கேட்க, சந்தியா என்ன சொல்லவென்று தெரியாமல் பின் ".அவனுக்கு இப்படி உருகுதே? சரி பொய் தான.. அவனுக்கு க்ளோஸ்ங்கற மாதிரி சொல்லாட்டி இது டூயட்டே பாடிடும்.." என்று நினைத்து "ஆமாம்.. மாமன் மகள்" என்றாள். அதற்கு அவள் "சரியா போச்சு. அதான் அந்த பிள்ள உன் மேல உரிமையா கைய நீட்டி இருக்கு." என்றவளை ஒரு வழியாக பேசி சமாளித்து அனுப்பி விட்டு, சுஜியிடம் திரும்பி

 

"நம்ம அந்நியன் திரும்பவும் உங்கள்ட்ட வர்றதுக்கு நிறைய சான்ஸ் இருக்கு. அப்படி வந்தா என்ன செய்வீங்க?" என்றாள்.

சுஜி அதற்கு "என்னக்கா இப்படி சொல்றீங்க? பயமா இருக்கு." என,

 

சந்தியா , "பயப்படாதீங்க. அப்படி வந்தா நான் ஒரு சைக்கியாட்ரிஸ்ட் போன் நம்பர்  எழுதி தாறேன். அதை அவர்கிட்ட குடுங்க. கார்த்திக் ஏதாவது கேட்டா எதுனாலும் அவங்ககிட்டே  பேசிக்க சொல்லுங்க ஒன்னும் செய்ய மாட்டரு.  போய்டுவாரு." என்று சொல்லியபடியே ஜெயந்தி கிருஷ்ணன் MD, என அதோடு ஒரு அலைபேசி எண்ணும்  மதியம் 2-3 மணிக்குள் அழைக்கவும் என்ற செய்தி அடங்கிய குறிப்பையும் சந்தியா சுஜியிடம்  கொடுத்த படி

"அப்புறம், கார்த்திக் ஏதாவது சொன்னா சரி சரின்னு கேட்டுக்கோங்க. நீங்களா  எதையும் பேசாதீங்க. முக்கியமா "போன்" பத்தி எதுவும் சொல்லி அவரை மறுபடியும் அந்நியனா மாத்திடாதீங்க " என்றாள்.

 

சுஜி, "சரிக்கா.. ஏன் அவருக்கு போன் மேல அவ்ளோ கொலவெறி? எதனால அவருக்கு இப்படி ஆச்சு?" என்றாள். சந்தியா "ஹப்பா.. இவ்ளோ யோசிச்சதுக்கே மூளை வலிக்குதே. இதுல ப்ளாஷ் பாக் கதைய வேற ரெடி பண்ணணுமா? கோடிட்ட இடத்தை நிரப்புக ன்னு விட்டுட வேண்டியது தான்" என நினைத்து, "சுஜி அது ஒரு சோக கதை. அது கார்த்திக்கோட சொந்த விஷயம். நான் பொதுவா மத்தவங்க விஷயத்தை நாலு பேரு மத்தில பேச மாட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க சாரி" என்று சொல்லி விட்டு அவளிடம் இருந்து விடை பெற்று அர்ஜுனின் அறையை அடைந்தாள். அப்போது மணி 9:30 யை நெருங்கி கொண்டிருந்தது. அவளின் நேர்முக தேர்வு அந்த நேரம் தான். அதை அவள் முற்றிலுமாக மறந்திருந்தாள்.

 

அங்கு சூர்யாவிடம் அருணகிரி பேசிக்  கொண்டிருந்ததை பார்த்த அவள், "என்னது சந்தியா புராணமா?" என்று சூர்யாவிடம் ரகசியமாய் "அது என்ன பத்தி இல்ல. இந்த சோபு தாத்தாவோட செகண்ட் வைப் பொண்ணு பேரும் சந்தியா தான். அவுங்க அவளை கூட்டிட்டு இவரை பிரிஞ்சி போய்ட்டாங்க. அந்த அதிர்ச்சில பொண்ண பத்தியே தான் பேசுவாரு. இன்னைக்கு நீங்க மாட்டிடீங்க" என்றாள். அவள் சொல்லிகொண்டிருக்கும் போது அவளை அறியாமல், சூர்யா மட்டும் பார்க்கும் வண்ணம் அர்ஜுன்,  "ரீல் சுத்துறாங்க" என ட்ரிப் ஏறாத கையால் சைகை செய்தான்.

 

சூர்யா அடக்க முடியாத சிரிப்புடன் "இது எந்த படத்தோட கதை ?" என்றான். சந்தியா சிறு ஏமாற்றத்துடன், "நீங்க தெளிவு தான். இரண்டு பொண்டாட்டி கதைக்கு எதுக்கு படம், மெகா சீரியல் போதுமே"  என சொல்ல அனைவரும் சிரித்தனர். அருணகிரி, "உன்னை பத்தி நாங்க சொல்ல கூடாதா? விளையாட்டு பொண்ணுமா  நீ. இதே மாதிரி எதோ படத்தை பாத்து குழம்பி டாக்டர திணற வைச்சன்னு  இப்போ தான் அவரு புலம்பிட்டு போனாரு. " என, சூர்யா "இதுக்காவாவது அந்த நடுவுல கொஞ்சம்... படத்த பாத்தாகணும்" என்றவன், "நீ பண்ற நல்லத நாலு பேருட்ட சொன்னா  அவுங்களுக்கும்  உன்னை மாதிரி செய்யணும்னு தோணும்ல?" என்றான். சந்தியா அதற்கு, "மத்தவங்கள்ட்ட சொல்லற அளவுக்கு யாராலுமே  செய்ய முடியாத அதிசயத்தை ஒன்னும்  நான் செய்யலை. இது முழுக்க முழுக்க என் சந்தோஷதுக்கு பண்றேன். நாம வேற பேசலாமே" என்று கூறி  அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

 

அப்போது தான் அவள் கன்னத்தை கவனித்தவனாய்  அர்ஜுன் , "அக்கா கன்னத்தில என்னது?"  என கேட்க சந்தியா "ஒரு சொ.." என ஆரம்பித்தவள் சூர்யா இருப்பதை உணர்ந்து "ஒரு வெறி  நாய் கடிச்சிடுச்சு" என்றாள்.  சூர்யா சிரித்தபடி "இதை மட்டும் கேட்டா, அது உன்னை உயிரோடே விட்டு வைக்காது" என, பதிலுக்கு சந்தியாவும் , "அது சரி, என் கை மாங்கா பறிக்குமா?" என்றாள். சூர்யாவும் சிரித்த படி "சபாஷ், சரியான போட்டி" என்று சொல்ல சந்தியாவும் அவனோடு சிரித்தாள். அவர்கள் எதோ புரியா மொழியில் பேசுவது போல அருணகிரியும், அர்ஜுனும் விழித்தனர். அப்போது அவள் போனில் அழைப்பு வந்தது. அது அவள் நேர்முக தேர்வுக்குச் செல்லும்  "என்விஷன் மேக்ஸ்" நிறுவனத்தின் ஹச்.ஆர். மேனேஜர் தினேஷ். அவள் நேர்முக தேர்விற்கு வருவதை உறுதி படுத்த அழைப்பதாக சொன்ன அவனிடம் அவள் சிறிது தாமதமாக வர அனுமதி பெற்றாள். (அவள் பேச்சு திறமையை சொல்லவா வேண்டும்!)

 

பின் அவர்களிடம் சொல்லி விடை பெற தயாரானவளிடம், சூர்யா "இருங்க சந்தியா. இன்னும் பைவ் மினிட்ஸ்ல கார் வந்துடும். பசங்கள தமிழ் கிளாஸ்ல பிக் பண்ணிட்டு  உங்கள நானே ட்ராப் பண்றேன்" என்றான். அவனோடு சேர்ந்து அருணகிரியும் வற்புறுத்த

சந்தியா சம்மதித்தாள்.

 

அருணகிரி சூர்யாவை பார்த்து "உங்களுக்கு எத்தனை பசங்க தம்பி?" என கேட்க "இரண்டு பொண்ணுங்க. ட்வின்ஸ் - நித்திஷா, நிக்கிதா. நாலு வயசாகுது." .

 

அர்ஜுன் அதற்கு "அய்.. அக்கா வீட்லயும் ட்வின்ஸ் இருக்காங்க" என்றான்.

 

சந்தியா , "ஆமாம், எனக்கு மூணு அக்கா. அதுல ஸ்ரீமா, பூமா ன்னு ரெண்டு பேரு ட்வின்ஸ்".

 

சூர்யா அதற்கு "ட்வின்ஸ்ஸ வளர்க்கிறதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆகிடுது". என்றான்.

 

சந்தியா, "என்ன இதுக்கே இப்படி சொல்றீங்க. எங்க அம்மா நாலு வருஷத்தில் நாலு பிள்ளைங்கள பெத்து வளத்து இருக்காங்க. அவங்க நிலைமை நினச்சு பாருங்க" என்றாள்.  

 

அர்ஜுன் ,"அம்மா எல்லாரையும் ஈசியா வளத்துடாங்க. சந்து அக்காவ வளக்குறதுக்கு தான் உயிரே போயிடுச்சாம்" என்றான்.

 

அனைவரும் சிரிக்க சந்தியா "டேய், கெஸ்ட் முன்னாடி பேரை டாமேஜ் பண்ணாதடா" என அவனை விளையாட்டாக அதட்ட, அர்ஜுனோ விடாமல் "உண்மையை தான சொன்னேன்" என்க, "படவா.. உனக்கு போய் விழுந்தடிச்சு ஓடி வந்தேன் பாரு என்ன சொல்லணும்" என்றாள்  அலுத்து கொள்வது போல.

 

இவர்கள் அன்னோநியத்தை பார்த்து ரசித்தவராய் அருணகிரி சூரியாவிடம் "இப்படி தாம்பா இவங்க இரண்டு பேரும் எப்ப அடிப்பாங்க எப்ப சேருவாங்கன்னே தெரியாது" என்றார்.

 

அர்ஜுன் அதற்கு "பாத்தீங்களாக்கா.. தாத்ஸ் கொடுக்கிற ரன்னிங் கமெண்ட்ரி" என, சந்தியா "ஆமாடா  உன்னை பாக்க வந்துட்டு தாத்ஸ் போடுற மொக்கைல சூர்யா பேஷன்ட் ஆகிடுவாரு போல" என்று சொல்லி இருவரும் ஹை பை கொடுக்க அந்த இடத்தில் சிரிப்பலை வீசியது. சூர்யாவிடம் தனது பிறந்த நாளை தெரிவித்து கைப்பையில் இருந்த சாக்லேட்டை நீட்டி "ப்ரண்ட்ஸ்" என்றாள். "தேங்க்ஸ். ஹப்பி பர்த்டே மை ப்ரண்ட்"  என அதை வாங்கியவன், "அவுங்களுக்கு கிடையாதா?" என்றான். அதற்கு அர்ஜுன் "நாங்க நைட்ட்டே இல்லத்தில வச்சு பார்ட்டி கொண்டாடியாச்சு" என்றான் .

 

சந்தியா வரவேற்பு பகுதியில் அவள் கதையை பரப்பியவர்களிடம் தனக்கு பிறந்தநாள் என இனிப்பு வழங்கி விட்டு கார்த்திக் பைக்கில் வைத்த  தனது ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு , சூர்யாவின் கார் வர, சூர்யாவுடன் சென்றாள் . சூர்யா ஓட்டுனர் அருகிலும் சந்தியா பின்னிருக்கையுளும் அமர, அவர்கள் செல்லும் போது பொதுவான விஷயங்களை பேசினர். சந்தியாவின் அக்கா பூமாவும் அமெரிக்காவில் வசிப்பதாக சொன்னாள்.  சூர்யா இன்னும் இரண்டு வாரங்களில் விடுப்பு முடிந்து அமெரிக்கா கிளம்புவதாக சொன்னான்.

 

"சூர்யா, ஜோ வும் உங்களோட வர்றாங்களா?" என்றாள் சந்தியா. "ஜோவா? குடும்பத்தில குழப்பத்த உண்டாக்காதம்மா. என் வைப் பேரு மீரா. அவளுக்கு என்ன ஜாலியா  இரண்டு மாசம் இந்தியால இருந்திட்டு  ஜூலைல தான் வருவா" என்றான். சந்தியா, "மீராவா? அப்போ ஜோ நிலைமை ?" என கேட்க  சூர்யா "அதை அவுங்க சூர்யா பாத்துபாங்க. நான் கூட கார்த்திக் மேல தான் தப்புன்னு நினச்சேன். இப்போ தான் உண்மை புரியுது" என்றான் சிரித்தபடி. "அப்படியா...ஆங்ரி பர்ட்ட கூண்டுல தள்ள எனக்கு எவ்ளோ நேரம் ஆகும்" என்று ஓட்டுனர் இருந்ததால் சங்கேத வார்த்தையால் கார்த்திக்கை குறிப்பிட்டாள். "நீ செஞ்சாலும் செய்வ . ஆனா ஆங்ரி பர்ட் குரல் எப்பவும் இவ்ளோ டல்லா இருந்ததே இல்ல" என்றான் சூர்யா.  சந்தியா "ஓ..." என்றவள் அதன்பின் மவுனமானாள். சற்று நேர அமைதியை களைத்தது அவளது  போன்.

 

சந்தியாவின் செல்போனில் அழைப்பு வந்த அதே நேரம், கார் தமிழாசிரியரின் வீட்டை அடைய சந்தியாவிடம் சொல்லிவிட்டு பிள்ளைகளை அழைக்க சென்றான் சூர்யா. சூர்யாவிடம் தலையாட்டியபடியே அழைப்பை எடுத்தாள் சந்தியா. ஒரு பெண் குரல்.

"ஹாய் திஸ் இஸ் மது ப்ரம் என்விஷன் மேக்ஸ்" என்றாள் அந்த குரலின் சொந்தக்காரி. ஒரு நொடி யோசனையோடு பேச வாய் திறந்தாள் சந்தியா.

இவ்வாறாக, முந்தய ஆட்டத்தின் கைகலப்பிற்கே இன்னும் பஞ்சாயத்து நடக்காத நிலையில், சந்தியா அதிவேகமாக அடுத்த ஆட்டதிற்கு களத்தை தயார் செய்து வலையை விரித்து வைத்திருக்கிறாள். சிங்கம் சிக்குமா? சீறுமா?

                                                                        ஆட்டம் தொடரும் ...     

Go to Episode 3   

Go to Episode 5     

 

{kunena_discuss:610}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.