Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 15 - 30 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pon maalai mayakkam
Pin It

தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 36 - பிந்து வினோத் 

விஜயனைப் போலவே பிறைநிலாவிற்கும் அந்த முத்தம் அவர்கள் இருவர் நடுவே இருக்கும் இனிக்கும் காதலை உணர்த்தும் காதல் மயக்கத்தை தான் கொடுத்தது... ஆனால், அவர்கள் இருவரும் இருக்கும் இடம் + காரணம் உணர்ந்து, கோபத்துடன் அவள் விஜயன் பக்கம் திரும்பவும்... விஜயன் மீண்டும் அவளின் கழுத்தில் முத்தமிட குனியவும் சரியாக இருந்தது...!!!!

இப்போது பிறைநிலா விஜயனின் பக்கமாக திரும்பி இருந்ததால் அவனின் அந்த முத்தம் அவனே எதிர்பார்க்காமல் அவளின் உதடுகளில் சென்று பதிந்தது!!!

விஜயனுக்கும் அது அதிர்ச்சி தான்... இனிய அதிர்ச்சி...!!!

ஆனால் எதிர்பாராத அந்த முத்தத்தில் பிறைநிலா தடுமாறிப் போனாள்... எப்போதும் போல விஜயனின் அருகாமையும், முத்தமும் பிறைநிலாவையும் மயக்க தான் செய்தது... ஆனால் சூழ்நிலை தெரியாமல் அவன் நடந்துக் கொண்ட விதம் கோபத்தையும் கொடுத்தது... ஏற்கனவே மனதில் இருந்த குழப்பங்களுடன் எக்ஸ்ட்ராவாக இந்தக் கோபமும் சேர்ந்துக் கொள்ள... அதிகம் யோசிக்காமல், கோபத்தில் ஒரு காரியம் செய்தாள்!

அடுத்த வினாடி ஒலித்த ‘பளார்...’ என்ற சத்தத்தில் அந்த இடம் அதிரவும், பிறைநிலா அவசரமாக திரும்பி எட்டிப் பார்த்தாள்...

நல்ல வேளையாக அங்கே சரோஜினியும் அவளின் செக்ரட்டரி ராஜேந்திரனும் இல்லை... இருவரும் முன்பு இருந்த இடத்தில் இருந்து சென்றிருந்தார்கள்...! பிறைநிலாவுக்குள் அசுவாசம் ஏற்பட்டது...

அதற்கு பின்பு தான் விஜயனை அறைந்து விட்டது அவளின் அறிவுக்கு புரிந்தது...!!

தெரியாமல் தவறு செய்து மாட்டிக் கொண்ட குழந்தையாக, பதற்றத்துடன் அவசர, அவசரமாக மீண்டும் விஜயன் பக்கமாக திரும்பினாள்...

கன்னத்தில் கை வைத்து நின்றிருந்த விஜயனிடம் அதிர்ச்சி, கோபம், ஏமாற்றம் என்ற பல ரகமான உணர்வுகள் தெரிந்தது...

“வின்...” என்று பிறைநிலா அழைக்கவும்... அதுவரை அதிர்ச்சியில் உறைந்து நின்றிருந்த விஜயன் இப்போது சுயநினைவு பெற்றவனாக அவளின் அழைப்பை மதிக்காமல் நடக்கத் தொடங்கினான்...

அவனின் கோபம் புரிந்தவளாக, பிறைநிலாவும் அவனின் பின்னே அவனை அழைத்துக் கொண்டே நடந்தாள்... கிட்டத்தட்ட ஓடினாள்...

“விஜயன்...! ப்ளீஸ் ஒரு நிமிஷம் நில்லுங்க...”

விஜயன் நிற்கவும் இல்லை... திரும்பி பார்க்கவும் இல்லை... நடந்துக் கொண்டே இருந்தான்...

“விஜயன்...” என பிறைநிலா மீண்டும், மீண்டும் மென்மையாக அவனை அழைத்தாள்..

  •  Start 
  •  Prev 
  •  1  2  3  4  5  6  7  8  9 
  •  Next 
  •  End 
Add comment

Comments  
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 36 - பிந்து வினோத்AdharvJo 2021-06-05 18:45
Eyes vachiteno :Q: last week twist illamal feel good ah irukkunu sonnadhu periya thappu pole facepalm :P
vijay and anand rendu perum bla bla bla nu etho kottitu poranga.... repercussions eppadi irukka pogudho!! Mr cool.kku mana azhutham adhigam agi pochi pole....
Coming to anand Yena than distress la irundhalum his verbal abuse towards agi is not fair 👊👊👊👊 akila vum oru arai vittu irukanum :P

Nila oda reaction also was too extreme adichadhum sari illai, patience illamal ippadi ellar munadiyum argue panadhum sari.
Vijay kaga Nila konjam adjust panal than enavam
nalla poi oru oru room la udkarndhu feel panatum😁😁 esply anand

Sincere sigamani agi oda outburst eppadi irukkumo..

Semma hot epi bindu ma'am 👏👏👏👏

Sarojini aunty-i purinjikave mudiyalaye...
Anyway ellarayaum nalla fry panuringa bind ma'am 😁😁

At least vijay and sheela aunty agi-a nambuvangala?? Samadhan.padalam eppo arambam agumo :Q:
Thank you.
Reply | Reply with quote | Quote
# #Pon Malai MayakkamAsha Sivaramakrishna 2021-06-05 14:44
the unexpected turning point in Pon Malai Mayakkam.. :Q:
Reply | Reply with quote | Quote
# #Ponmalai mayakkamAsha Sivaramakrishna 2021-06-05 14:42
Illam devi yaga iruku neraya vaippu irukuthu... :o
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 36 - பிந்து வினோத்Tamil Sri 2021-06-05 11:32
Interesting episode❤❤❤ waiting for your next episode
Reply | Reply with quote | Quote
# Ponmalai mayakkamSrichitra 2021-06-05 12:39
Very sad. Romba sogamaga ulladhu. இரண்டு கல்யாணம் எப்படி நடக்கும். விரைவில் யார் தவறு செய்தது என சொல்லுங்கள் அடுத்த பதிவில்.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 36 - பிந்து வினோத்madhumathi9 2021-06-05 10:39
facepalm :sad: epi.yaarthaan antha photos velivanthatharkku kaaranamaaga irukkum :Q: ahila illainnu thonuthu.very eagerly waiting 4 next epi. :thnkx: & :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - பொன் மாலை மயக்கம் - 36 - பிந்து வினோத்Arunaa 2021-06-05 09:20
Oh no.. seekiram rendu pairyum serthu vachidunga
Reply | Reply with quote | Quote

Chillzee Series update schedule

M Tu W Th F Sa  Su
MMVU

NeeNaan

NAI

KiMo

PVOVN2

PMM

KTKOP

VTV

IOK

SNSN

EEKS

KET

KKP

POK

NSS

NSS

NSS

NSS

NSS

MuSi

VAMA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top