(Reading time: 12 - 24 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 22 - ஜெபமலர்

பிஸில் அமர்ந்து இருந்த ஜனாவால் வேலையில் தன் கவனத்தை பதிக்க இயலவில்லை. காலையில் தன்னிடம் எதுவும் சொல்லாமல் ஆபீஸ்க்கு லேட்டா வருவேனு மட்டும் சொல்லிவிட்டு சென்றிருந்த ஜனனியின் நினைவாகவே இருந்தது. இரண்டு மணி நேரம் ஆகி விட்டது. இன்னும் வரவில்லை.

 அவள் வெளியே செல்கிறேன் என்று சொல்லும்பொழுது ஜனா எங்கே என்று எந்த கேள்வியும் கேட்கவில்லை. ஆனால் இப்பொழுது அவன் மனம் கிடந்து தவித்தது.

 எங்கே சென்று இருப்பாள். ஒருவேளை நேற்று பள்ளியில் பார்த்த அந்த "அவளை" பார்க்க சென்று விட்டானோ.... என்று நினைக்கும்போதே அவனால் கோபத்தை அடக்க முடியவில்லை. அவன் கை முஷ்டி இருக்கிறது.

அவனது மனமும் அவனிடமே கேள்வி கேட்டது. நான் லேட்டாக வருவேன் என்று அவள் சொல்லும்போது எங்கே செல்கிறாள் என்று கேட்டு தெரிந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு இப்படி  அவளையே நினைத்து வருந்துகிறாயே... என்று அவனை கேலி செய்தது அவன் மனம்.

இன்னொரு பக்கமோ நான் ஏன் அவளிடம் பேசவேண்டும்... அவளே என்னிடம் ஏன் கோபப்பட்டேனென்று எதுவும் கேட்கவில்லை. அப்படி இருக்கும்போது நான் ஏன் அவளிடம் இளித்து கொண்டு நிற்க வேண்டும். அவள் பெரிய மகாராணி.... எதுவும் வாய் திறந்து பேச மாட்டாள்... நானே போய் பேச வேண்டுமோ... முடியாது.... நான் இனி அவளிடம் பேசப் போவதில்லை என்று இறுக்கமாக அமர்ந்து கொண்டான். 

அவன் மனமோ... மச்சி நீயாக எத்தனை தடவைடா ஜனனியிடம் போய் பேசின... 20 முறை.... ம்ம் இல்லை...ஒரு பத்து முறை... இல்லையே... ஐந்து மூன்று இரண்டு இல்லவே இல்லை... ம்ம் ஒரு தடவை ... அதுவும் இல்லையே என்று சிரிக்க ஷட்டப் என்று கத்தி தன் மனதை கடிந்து கொண்டான்.

அவள் என்ன சின்ன குழந்தையா... திரும்பி வருவாள் என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான். எப்படிதான் தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டாலும் அவனால் அவன் கவனத்தை வேலையில் பதிக்கவே முடியவில்லை.

 அவள் எப்படியும் போகிறாள் என்று அவனால் விட முடியவில்லை. யாரையும் எளிதாக நம்பி விடும் இளகிய மனம் படைத்தவள் அல்லவா ஜனனி... ஒருவேளை அந்தப் பெண்ணை நம்பி அவளிடம் பேசப் போய் ஏதாவது ஆபத்தில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது? என்று அவன் மனம் தத்தளித்துக்கொண்டிருந்தது..

 யாரோ ஒருவராக இருந்தால் கூட அவர்கள் ஆபத்தில் சிக்கிக் கொள்வதை விரும்ப முடியாது.... அப்படி இருக்கும்போது தன் மனைவி அதுவும் தன் மனம் முழுவதும் நிரம்பி

10 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.