(Reading time: 12 - 24 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

 ஆனால் தன்னைப் பார்த்தால் மட்டும் அவளது முகம் ஆயிரமாயிரம் ரியாக்ஷனை முகத்தில் காட்டுகிறது.  கோபம்வெறுப்பு, ஏக்கம், தவிப்பு இப்படி பல... அதிகப்படியாக யோசனைதான் என்னைப் பார்த்தாலே இவள் முகத்தில் ஓடும்... அப்படி என்னதான் யோசிப்பாளோ என்னை பற்றி தெரியவில்லை. வெளியே சொன்னாலாவது தெரிந்துகொள்ளலாம். அனைத்தையும் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்துக் கொள்வாள். என்ன பெண் இவள் என்று தனக்குள்ளே நொந்து கொண்டான் ஜனா.

 என்னிடம் பேச வேண்டும் என்றால் மட்டும் இவளுக்கு ஏன் தான் இப்படி கசக்கிறதோ என்று தனக்குள்ளே கசந்து கொண்டான்.  ஆனால் அவனங யோசித்துப் பார்க்கவில்லை. தான் என்றாவது அவளிடம் நேரிடையாக எதையாவது பேசி இருக்கிறேனா என்று... நேசிப்பதாகவும் அவளிடம் சொல்லவில்லை என்பதையும் அவன் மறந்து போயிருந்தான்.

 என்னமோ அவள் மட்டுமே பேசாதது போலவும் தான் அவளிடம் எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பது போலவும் அவள் பதில் சொல்லாதது போலவும் மொத்த குற்றச்சாட்டையும் அவள் மீதே சாட்டினான். இவள் என்னிடம் மட்டும் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்று தனக்குத் தானே கேள்வி கேட்டுக் கொண்டான்.

 அவள் மீது கொண்ட அதீத அன்பினால் அவள் மற்றவரிடம் சிரித்து பேசுவதை கூட அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதில் பொறாமை இல்லை என்றாலும் தன்னிடம் பேசவில்லையே என்று ஒரு ஏக்கம் இருந்தது.

அவன் கண்கள் வெளியிலேயே வெறித்து இருந்தாலும் அவன் நினைவுகள் முழுவதும் ஜனனியை சுற்றி வந்ததாலோ என்னவோ அங்கிருந்து அஸ்விட் புறப்பட்டு செல்வதையோ ஜனனி உள்ளே வருவதையோ அவன் கவனிக்கவில்லை.

 திடீரென்று தனக்கு பின்னால் கேட்ட சத்தத்தில் விழித்துக்கொண்ட அவன் யாராக இருக்கும், என்னிடம் அனுமதி பெறாமல் உள்ளே வந்தது என்று கோபத்துடன் திரும்பிப் பார்த்தபோது அவனுக்கு முன்பாக அமர்ந்திருந்தாள் ஜனனி.

எப்போதுமே தன்னை பார்த்தால் சற்று ஒதுங்கி நின்று பேசி விட்டு அப்படியே சென்று விடுபவள் இன்று தனக்கு முன்பாக அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் ஜனாக்கு சற்று யோசனையாக தான் இருந்தது. ஆனால் எதையுமே வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவனும் அமைதியாக அமர்ந்தான்.

ஆபீஸ் கணக்கு வழக்கு சம்பந்தமாக சில சந்தேகங்களை அவனிடம் கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டவள் சில மாற்றங்களையும் அவனிடம் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறினாள்.

 அவள் முகத்தில் எந்த ஒரு மாற்றமும் தெரியவில்லை.ஆனால் அவளை பார்க்கும் பொழுது

10 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.