(Reading time: 14 - 27 minutes)

"ஏன் இனியா" என வினவினான் பாலு.

 

"அத்தான் இன்றைக்கு சந்தோஷமாக இருக்கும் என் அப்பா அம்மாவை தான் உங்களுக்கு தெரியும். சில வருடங்களுக்கு முன்பு வரை நிலையே வேறு, என் அம்மா எந்த நிலையில் நடத்த பட்டார் தெரியுமா? அவர் சொல்லுக்கு ஒரு மதிப்பும் கொடுக்க படாது. எனக்கு அப்பவெல்லாம அம்மாவை பார்த்தால் அப்பா அம்மாவை விலை கொடுத்து வாங்கி விட்டாரோ என்று தான் தோன்றும். என் அம்மா அன்று விட்டு கொடுக்காமல் இருந்திருந்தால் இன்று இந்த வாழ்க்கை இருந்திருக்காது. என் அம்மாவின் தவத்திற்காக கிடைத்த வரம் இப்போது கிடைத்திருக்கும் வாழ்க்கை என்று வைத்துக் கொள்ளளாமா? முன்பொரு காலத்தில் தவமிருந்தால் வரம் கிடைப்பது நிச்சயம் என தெரிந்து தான் தவமிருந்தார்களோ என்னவோ. ஆனால் என் அம்மாவோ என் அப்பா மாறுவது நிச்சயமா என்று கூட தெரியாமல் தான் அந்த தவத்தை கடைபிடித்தார்கள், அதை தவம் என்று கூட சொல்ல முடியாது அத்தான் அது ஒரு வனவாசம் என்று தான் சொல்ல வேண்டும். எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாத வனவாசம்" என சோகமாக பேசினாள்.

 

சில நிமிடங்களுக்கு பாலுவிற்கு ஒன்றுமே புரியவில்லை. இப்போது இனியா சொன்ன எல்லாமே அவனுக்கு செய்தி, அப்படியா என வியந்து போய் விட்டான். யாருமே சிறிது நேரம் பேசவில்லை.

 

ஒரே அமைதியாக இருந்தது. அந்த அமைதியை கெடுப்பது போல் இனியாவின் செல்போன் குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா என்று ஒலித்தது.

      

இனியா போனை எடுத்து பேசி விட்டு "அம்மா ஒரு அவசர கேசாம், ஆஸ்பத்திரியில் வர சொல்கிறார்கள். நான் போய் விட்டு வருகிறேன்" என கிளம்பினாள். அப்போது அவளுக்கு தெரியவில்லை தன் வாழ்க்கையையே மாற்றப் போகும் ஒரு நபரை அங்கே சந்திக்க போகிறோமென்று.

 

னியாவின் ஸ்கூட்டி பழுதாகி இருப்பதால் ஆட்டோவில் சென்றாள். ஆட்டோவில் ஏறி அமர்ந்து மருத்துவமனையின் பெயரை கூறி விட்டு சிறிது அமைதியாக கண்ணை மூடி அமர்ந்து விட்டாள்.

      

இனியாவிற்கு மருத்துவமனையில் சென்று அங்கு இருக்கும் சூழ்நிலையை சமாளிக்க அமைதியான மனநிலைமை தேவைபட்டது, அதனால் மனதை அமைதி படுத்த முயன்றாள். ஆனாலும் முடியவில்லை இத்தனை நாளாக வம்படியாக நினைக்க கூடாது என்ற நினைவுகளை இன்று வந்த தன் திருமண பிரச்சனையால் அதையெல்லாம நினைக்க வேண்டியாயிற்று என்று நொந்து கொண்டாள்.

 

அதற்குள் மருத்துவமனை வந்தாயிற்று என்று ஆட்டோ ஓட்டுநர் குரல் கொடுக்கவே பணத்தை கொடுத்து விட்டு உள்ளே நுழைந்தாள். பொது மருத்துவர் ரவிச்சந்திரன் அவளை நோக்கி வந்து “இனியா ஒரு 24 வயது பையன் காதல் தோல்வி என்று தற்கொலைக்கு முயன்று இங்கு வந்திருந்தான். இங்கு திரும்ப தற்கொலைக்கு முயன்று பெரிய பிரச்சனை ஆகி விட்டது. திருப்பி அனுப்பி விடலாம்னு பாத்தா அதுவும் முடியலை ஏதோ பெரிய இடத்து பையனாம், நம்ம நிர்வாகிக்கும் ரொம்ப தெரிஞ்சவன் போல என்னால முடியலை காப்பாத்துமா” என்று மூச்சு வாங்காமல் சொல்லி முடித்தான்.

      

இனியா தான் பார்த்து கொள்வதாக கைகளாளேயே அவனுக்கு அபயம் அளித்து அந்த பையன் இருக்கும் அறையை அறிந்து கொண்டு அங்கே சென்றாள்.

 

அந்த அறையை இனியா அடையும் போது ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. அந்த அறையில் இருந்த பையன் மிகவும் சோர்வாக இருந்தான். அதையும் மீறி ஏதோ கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தான்.

 

அவனின் தாய் போலும் அவனை சமாதானபடுத்த முயன்று தோற்றுக் கொண்டிருந்தார். இனியா நுழைந்து தன்னை அறிமுகபடுத்திக் கொண்டாள்.

 

ஒரு நர்ஸை அழைத்து அவன் அறையில் இருக்க சொல்லி விட்டு அவன் தாயை அழைத்துக் கொண்டு வெளியே வந்தாள். உண்மையில் அவன் தாய் தான் மிகவும் சோர்ந்து போய் காணப்பட்டாள். இனியாவிற்கு மிகவும் கஷ்டமாகி போனது. அவளிடம் அன்பாக என்ன ஆயிற்று என்று விசாரித்தாள்.

 

வர்கள் அரசன் குரூப் ஆப் கம்பெனியின் முதலாளி என்பது தெரிய வந்தது. அவர்களுக்கு இரண்டு மகன்களாம். இவன் இரண்டாம் மகன் சந்திரசேகராம். ஏதோ காதல் விவகாரமாம். அதற்காக தற்கொலைக்கு முயன்றிருக்கிறான். இங்கு வந்து சரியாகிய நேரத்தில் திரும்ப அந்த பெண்ணை நினைவுபடுத்துவது போல் யாரோ வந்து பார்த்ததால் திரும்ப தற்கொலைக்கு முயன்றான் என்பது வரை சொல்லி முடித்தார்கள். சரி தான் பார்த்து கொள்வதாக இனியா அவர்களுக்கு வாக்களித்து அந்த அறையை நோக்கி சென்றாள்.

 

இனியாவிற்கு மிக ஆச்சரியமாக இருந்தது. அரசன் குரூப் ஆப் கம்பெனி சென்னையிலேயே மிக பெரிய கம்பெனிகளுள் ஒன்று. அதுவும் இந்த சில வருடங்களில் அசாத்திய வளர்ச்சி அடைந்து இருந்தது. அந்த வீட்டு பெண்மணியால் எப்படி இவ்வளவு சாதாரணமாக இருக்க முடிகிறது என எண்ணி வியந்தாள்.

      

தான் போன வாரம் அவர்களின் துணிக்கடைக்கு சென்ற போது அந்த கடையின் பெயரை திரும்ப திரும்ப பார்த்து கொண்டிருந்தாள். அக்கா ஜோதி என்னவென்று கேட்டதற்கு இவர்கள் எந்த ராஜ்ஜியத்திற்கு அரசனாம்?  சென்னைக்கா, தமிழ்நாட்டிற்கா, இல்லை இந்தியாவிற்கேவா என தான் கிண்டலடித்தது அவள் நியாபகத்திற்கு வந்து சிரித்துக் கொண்டே சந்திரசேகரின் அறையை அடைந்தாள்.

 

அங்கு வாழ்க்கையை தொலைத்தது போன்ற பாவனையுடன் விட்டத்தை வெறித்து கொண்டிருந்தான். அவள் அமைதியாக அவனை பார்வையிட்டு சந்தர் என கூப்பிட்டாள். அவன் மௌனமாக திரும்பினான். ஆனால் பேசவில்லை.

 

இனியாவே பேச ஆரம்பித்தாள். ஒரு பத்து நிமிடங்கள் ஏதேதோ பேசிய பிறகே அவனை வாய் திறக்க வைக்க முடிந்தது. அவன் சசி என்ற பெண்ணை உயிராய் காதலித்ததாகவும் அவளும் காதலித்தாள் என்று கூறினான். இப்போது பிரிந்து விட்டோம் என கூறினான். ஆனால் ஏன் பிரிந்தோம் என கூற மறுத்து விட்டான். தனக்கு வாழவே பிடிக்கவில்லை என கூறினான்.

 

இனியா தன் தோழி ஒருத்தி காதல் தோல்வியால் இறந்து விட்டதாகவும் அதனால் அவள் பெற்றோர் எவ்வளவு வருத்த படுகிறார்கள் எனவும் எடுத்து கூறினாள். இதை கேட்ட அவன் முகத்தில் சலனம் ஏற்பட்டது. எனவே இனியா தொடர்ந்து பேசினாள்.

 

நீங்கள் இல்லையெனில் உங்கள் அம்மா எவ்வளவு வருத்த படுவார்கள் என எடுத்து கூறினாள். அவன் ஒரு நிமிடம் யோசித்து விட்டு "இல்லையே அம்மாவிற்கு அண்ணன் இருக்கிறார்களே நான் இல்லையெனினும் அவர்கள் அவ்வளவு வருந்த அவசியமில்லையே அண்ணன் அவர்களை நன்றாக கவனித்து கொள்வார் தானே" என கூறினான்.

 

இதை கேட்ட இனியாவிற்கு சிரிப்பு தான் வந்தது. இவன் வளர்ந்த குழந்தை என எண்ணிக் கொண்டாள். அவள் அவன் அம்மாவை நினைத்து பார்த்தாள். அவர் நெற்றியில் குங்குமம் இல்லை. சந்தரின் அப்பா தற்போது இல்லையென புரிந்து கொண்டு அவனிடம் உன் அப்பா எப்போது இறந்தார் என கேட்டாள். 5 வருடங்களுக்கு முன்பு ஒரு விபத்தில் அப்பா போய் விட்டார் என வருத்தத்துடன் கூறினான்.

 

இவன் மிகவும் அன்பானவன் தான் என முடிவு செய்து கொண்டு “உன் தந்தை இறந்ததற்காக நீ வருத்த படவில்லையா” என கேட்டாள்.

 

சந்தரின் உடல் ஒரு நிமிடம் விறைத்தது. “சிறு வயதில் இருந்து அன்பாக வளர்த்த தந்தை இல்லையெனும் போது வருத்த படாமல் இருப்பார்களா? நான் எவ்வளவு வருத்தப்பட்டேன் தெரியுமா இப்போதும் அப்பாவை பற்றி நினைத்தால் எனக்கு எவ்வளவு கஷ்டமாகி போகும் தெரியுமா” என கேட்டான் அவன்.

 

இனியா ஒரு புன்முருவலுடன் “உன் தாய்க்கு மட்டும் இத்தனை வருடம் உன்னை வளர்த்து நீ இல்லையென்றானவுடன் வருத்தமிருக்காது என்று நீ எப்படி கூறுகிறாய்” என்று எதிர் கேள்வி கேட்டாள். சந்தர் திகைத்தான். பின் அதை புரிந்து கொண்ட பாவம் அவன் முகத்தில் தெரிந்தது.

 

அதை அவள் பார்த்துக் கொண்டிருக்கையிலே புயல் போல ஒருவன் வந்து அவளின் கையை பிடித்து வெளியே இழுத்து சென்றான். இனியாவிற்கு ஒன்றுமே புரியவில்லை.

 

"ஏய் நீ யார் என்று கேட்டாள்."

 

வன் அவள் கேட்பதை காதிலே வாங்கி கொள்ளவதாக தெரியவில்லை. “அவன் உயிருடன் வாழ்வது உனக்கு பிடிக்கவில்லையா அவனை ஒரு முறை தற்கொலைக்கு தூண்டியதோடு அல்லாமல் மறுபடியும் அவனை சித்ரவதை செய்கிற உன் மாதிரி பெண்களை என்ன தான் சொல்வது” என கூறினான்.

 

இனியாவிற்கு பேசவே அவன் வாய்ப்பு கொடுக்கவில்லை. "நான் நினைத்தால் உன்னையும் உன்னுடன் இருப்பவர்களையும் என்ன வேண்டுமானாலும் செய்வேன் தெரிந்து கொள்" என அவளை உலுக்கி எடுத்து விட்டான்.

 

இனியாவிற்கு கோவம் தலைக்கேறியது. "மிஸ்டர் யாரிடம் பேசுகிறாய் என்று தெரிந்து பேசுங்கள். தலை கால் புரியாமல் கத்தாதீர்கள்" என கூறினாள்.

 

அவனோ "நீ யாராக இருந்தால் எனக்கென்ன ஒருவனை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கஷ்டபடுத்தியது மட்டும் அல்லாமல் திரும்பவும் வந்து அவனுக்கு தொந்தரவு தருகிறீர்களே உங்களை எல்லாம் என்ன செய்வது. மறுபடியும் உன்னையோ உன் நண்பர்களையோ இங்கு பார்த்தேன் எனில் என்ன செய்வேன் என்றே தெரியாது" என மிரட்டினான்.

 

ப்போது வந்த ரவிச்சந்திரன் தான் இனியாவை அந்த புதியவனிடம் இருந்து காப்பாற்றினான். ரவிச்சந்திரனும் சந்தரின் தாயும் சேர்ந்து தான் வந்தார்கள். வந்தவர்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை. இவன் ஏன் இனியாவின் கை பிடித்து திட்டிக்(கத்திக்) கொண்டிருக்கிறான் என்று.

 

வந்த தாயிடம் அவனே பாய்ந்தான். "சந்துருவை பார்த்து கொள்ளாமல் கண்டவர்களை எல்லாம் உள்ளே விட்டு விட்டு என்ன செய்கிறீர்கள்" என்று. இனியா கண்களாலே எரித்து விடுபவள் போல முறைத்தாள். அதை கண்டு கொள்ளாமல் அவன் தாயிடம் எறிந்து விழுந்தான்.

 

ரவிச்சந்திரன் தான் தலையிட்டு "முதலில் இனியாவின் கையை விடுங்கள் மிஸ்டர் இளவரசன்" என்றான்.

 

அப்போது தான் இருவருக்குமே அது உறைத்தது. இளவரசன் தீயை தொட்டாற் போல அவள் கையை விடுவித்தான்.

 

உடனே இளவரசன் "என்ன டாக்டர் ரவி, பேஷண்டை பார்க்கவென்று விசிட்டர் பாஸ் இல்லாதவர்களை எல்லாம் நீங்கள் எப்படி உள்ளே விடலாம்" என்று கேட்டான்.

 

அப்போது தான் எல்லோருக்கும் புரிந்தது. அவன் இனியாவை யாரோவென்று நினைத்துக் கொண்டிருக்கிறான் என்று. உடனே அவனிடம் திரும்பிய ரவி "பாருங்கள் மிஸ்டர் இளவரசன் இவர்கள் ஒன்றும் யாரோ இல்லை இந்த மருத்துவமனையின் சைக்காலஜிஸ்ட்" என்றான்.

 

இனியா இன்னும் அவனையே வெறித்துக் கொண்டிருந்தாள். என்னவெல்லாம் கூறிவிட்டான். அவன் வருத்தபடுவதை சந்தோஷமாக பார்க்க வேண்டுமென பார்த்தாள். அவன் முகம் அடிபட்டாற் போல மாறியது,

 

ஆனால் அது மிக சில வினாடிகளே நீடித்தது. சாரி என அவன் அவளிடம் கூறிக் கொண்டிருக்கும் போதே ரவி "வாருங்கள் சந்திரசேகரின் அறைக்கு செல்வோம்" என முன் சென்றான். அவனை தொடர்ந்து இளவரசனின் தாய் ராஜலட்சுமி செல்ல இவர்கள் இருவரும் கடைசியில் மெதுவாக நகர்ந்தனர். 

தொடரும்

En Iniyavale   - 2

{kunena_discuss:679}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.