(Reading time: 8 - 16 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

“முரளி...இந்த உலகத்தின் எந்த மூலைக்கு நீ போயிருந்தாலும் உன்னைத் தேடிக் கண்டுபிடிச்சு வந்திடுவேண்டா!....அதாண்டா நட்பு” என்றான் தனசேகர்.

  

“சாப்பிட்டியாடா?” நண்பனின் கண்களைப் பார்த்துக் கேட்டான் முரளி.

  

“ம்...சாப்பிட்டாச்சு!”

  

“சரி...எப்படி நான் இருக்குமிடத்தைக் கண்டுபிடிச்சே?” வியப்போடு கேட்டான் முரளி.

  

“தூய்மையான நட்பை...ஆண்டவன் ரொம்ப நாளைக்குப் பிரிச்சு வைக்க மாட்டான்!...” என்றான் தனசேகர்.

  

“முரளித் தம்பி...உன் சிநேகிதன் எப்படி உன்னோட இருப்பிடத்தைக் கண்டு பிடிச்சான்?ன்கிற கதையை நாம் அப்புறம் பேசலாம்!..அதுக்கு முன்னாடி உங்க ரெண்டு பேரையும் பிரிச்சவங்களுக்கு அவன் என்ன தண்டனை குடுத்திட்டு வந்திருக்கான்?ன்னு கேளு” என்றார் உள்ளே வந்த தங்கவேலு.

  

புருவங்களை நெரித்துக் கொண்டு தனசேகரைப் பார்த்த முரளி, “என்னடா?...என்ன பண்ணி வெச்சிட்டு வந்திருக்கே?” இரண்டு கிராம் கோபத்தோடு கேட்டான்.

  

“அதெல்லாம் ஒண்ணுமில்லைடா”என்று தனசேகர் சமாளிக்க,

  

“அதையும் நானே சொல்றேன்...“எந்தப் பொண்ணை என் கூடச் சேர்ப்பதற்க்காக என் நண்பனைப் பிரிச்சீங்களோ...அந்தப் பெண்ணை நான் ஒதுக்கி வைக்கறேன்”னு சொல்லிட்டு, தாலி கட்டின கையோட அந்தப் பெண்ணை அப்படியே மண்டபத்திலிருந்தே அவ வீட்டுக்குத் துரத்திட்டான்” என்று தங்கவேலு சொன்னதும்,

  

முரளி தனசேகரைக் கோபமாய்ப் பார்க்க, அவன் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.

  

“இன்னும் சொல்றேன் கேளு முரளி!...எப்ப நீ அவன் கூட சேருகிறாயோ...அப்பத்தான் அந்தப்

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.