(Reading time: 6 - 11 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

பார்க்க,

  

“என்ன...புரியலையா?..எங்க அக்கா மக மல்லிகாவை நான்தான் கட்டிக்கிறதா இருந்தேன்....நான் கொஞ்சம் ஏமாந்திருந்த நேரத்துல நீங்க வந்து உங்க மகனுக்கு முடிச்சுக்கிட்டீங்க!...எப்படி?...உங்க பணக்காரத்தனத்தைக் காட்டி..” என்றான்.

  

“யப்பா...இதையெல்லாம் நீ அங்க உங்க அக்கா கிட்டேயும்...உங்க மச்சான் கிட்டேயும் போய்ப் பேசு...எங்க கிட்டப் பேசாதே” பொன்னுரங்கம் சொல்ல,

  

“சரி...கட்டிக்கிட்டீங்க!...அதுக்கப்புறம் எங்க பொண்ணை உங்க வீட்டுக்கே கூட்டிட்டு வராம அப்படியே மண்டபத்தோடவே திருப்பி அனுப்பிட்டீங்களாமே?...கேட்க யாருமில்லை!ன்னு நெனச்சு இதையெல்லாம் பண்றீங்களா?...கேட்கத்தான் நான் வந்திருக்கேன்..!...உங்க மகன் ஒதுக்கிய பெண்ணை பஞ்சாயத்துல நிக்க வெச்சு...தாலியை அறுக்க வெச்சு...மறு தாலியை நான் கட்டப் போறேன்!...பார்க்கறீங்களா?” காட்டுவாசி போல் ஆடிக் கொண்டே பேசினான் சொக்கு.

  

லாரியிலிருந்து இறங்கி வந்த தனசேகர் நேரே அவனிடம் சென்று, “யார் நீ?...உனக்கு என்ன வேணும்?” கேட்டான்.

  

அவனைப் பார்த்ததும் அவன் தாய் சுந்தரி, “டேய் சேகர்...எங்கேடா போயிருந்தே?” அடக்க மாட்டாமல் உடனே கேட்க,

  

“ஓ...இவன்தான் எங்க பொண்ணை ஒதுக்கி வெச்ச மாப்பிள்ளையா?...”என்று கேட்டவாறே தனசேகரின் தாடையைத் தொட்டுத் திருப்பி, “த பாருப்பா...மல்லிகா நான் கட்டிக்க வேண்டிய பொண்ணு!...நீதான் “அவ வேண்டாம்!”னு ஒதுக்கிட்டியல்ல?...அப்படியே இருந்துக்கோ!...இனி அவ பக்கம் வந்திடாதே!” என்றான் சொக்கு.

  

தனசேகர் தன் தாயைப் பார்க்க, “உங்க மாமியாரோட ஒரே தம்பி...சொக்கு!...மல்லிகாவோட முறை மாமன்!”என்று அவனை அடையாளம் கூறினாள் அவள்.

  

“அய்யா...சொக்கு...எங்களுக்குள்ளே வந்திருப்பது சின்ன பிரிவுதான்!...பெரிய பிளவு

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.