(Reading time: 5 - 9 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

“அம்மாடி.!..எனக்கு அந்த முரளியோட சொந்த ஊரு, அந்த ஊர்ல இருக்கற அவன் வீடு, அந்த வீடு இருக்கற தெரு, எல்லாமே தெரியும்!...உண்மையில் நீ அவனை எதுக்குத் தேடறே?ன்னு சொல்லு நான் அவனை இங்க வரவழைக்கறேன்...இல்லேன்னா...உன்னை அங்க கூட்டிட்டுப் போறேன்!...ஆனா நீ உண்மையைச் சொல்லணும்”என்று நிபந்தனை போட்டார்.

  

அமைதியாய் கீழே பார்த்தபடி சில நிமிடங்களைக் கட்த்தியவள், “பொசுக்”கென்று கண்ணீர் விட்டு அழுதாள்.

  

அரண்டு போனார் தங்கவேலு.

  

“என்னம்மா?...என்ன விஷயம்?...எதுக்கு இப்ப அழறே?...விஷயத்தைச் சொல்லிட்டு அழு!”

  

“வந்து...நான் முரளியை பார்த்தப்ப...எனக்குள் எதுவும் மாறலை!...ஆனா அவரு அந்தப் பணத்தை நேர்மையான முறைல...சேர்க்க வேண்டிய இடத்துல சேர்த்தாரே?...அப்பவே...அந்த நிமிஷமே நான் என் மனசை அவர் கிட்டப் பறி கொடுத்திட்டேன்!...” தயங்கித் தயங்கிச் சொன்னாள்.

  

“ஹா....ஹா....ஹா...” என்று சிரித்த தங்கவேலு, “பயலோட காதல் வலைல விழுந்திட்டே...அப்படித்தானே?”

  

“ஆமாம்” என்று மேலும் கீழும் தலையை ஆட்டியவள்,  “என் காதலை அவர் கிட்டே சொல்ல...பயமாயிருந்திச்சு” என்று சொல்ல,

  

“இன்னிக்கு மட்டும் எப்படி தைரியம் வந்திச்சு?” தலையைச் சாய்த்துக் கொண்டு தங்கவேலு கேட்க,

  

“ஏன்னா...எங்க வீட்டுல எனக்கு வேற மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க!...அதான் மனசுக்குள்ளார முரளியை வெச்சுக்கிட்டு...வேற் ஒருத்தருக்கு கழுத்தை நீட்ட எனக்கு மனசு வரலை!” லேசாய்க் கண் கலங்கினாள்.

  

“என்னம்மா...திடீர்னு வந்து இப்படிச் சொல்றியே?” என்று மேவாயைத் தேய்த்தவர், “சரி...நீ

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.