(Reading time: 4 - 7 minutes)
Kai kortha priyangal
Kai kortha priyangal

“இன்ஸ்பெக்டர்...ஒரு நிமிஷம்” மன மேடையிலிருந்து நித்யா பேசினாள்.

  

“அவர் என்னைக் கடத்திட்டு வரலை!...நாந்தான் அவரோடு வந்தேன்” சற்றும் தயக்கமில்லாமல் தெளிவாகக் கூறினாள் நித்யா.

  

இன்ஸ்பெக்டர் திரும்பி நித்யாவின் தந்தை முருகனைப் பார்க்க, “இல்லை சார்...அவளை மிரட்டி அப்படிச் சொல்ல வெச்சிருக்காங்க” கத்தினார்.

  

“இல்லை...இவர்தான் பணத்துக்கு ஆசைப்பட்டு...எனக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத மாப்பிள்ளையை எனக்குக் கட்டி வைக்கப் பார்த்தார்...அதனால்..நான் இவர்கிட்டேயிருந்து தப்பிச்சு...இந்த தங்கவேல் அண்ணனோட வந்தேன்!...இதோ என் பக்கத்துல உட்கார்ந்திட்டிருக்காரே?...இந்த முரளி...இவர்தான் என் காதலர்!...இவரைத்தான் நான் கல்யாணமும் செய்துக்கப் போறேன்!...இதை யாரும் தடுக்க முடியாது!...”  ஆணித்தரமாய் அவள் சொல்ல,

  

அரங்கமே கை தட்டியது.

  

சிரித்துக் கொண்டே முன்னால் வந்த சொக்கு, “என்ன இன்ஸ்பெக்டர்? மேஜர் பொண்ணு எப்படி அழுத்தம் திருத்தமா பேசினா பார்த்தீங்களா?” என்றான்.

  

சிரித்தபடியே எழுந்து நித்யாவின் தந்தையிடம் வந்த சிங்கமுத்து,

  

“அய்யா...உங்க்ளுக்கு இப்ப ஒரு விஷயம் சொல்றேன்!...நல்லா கேட்டுக்கங்க!...மேடையில் உட்கார்ந்திருக்கற அந்த முரளியை நான் தத்தெடுக்கப் போறேன்!...என்னோட டிரான்ஸ்போர்ட் பொறுப்பு அத்தனையையும் நான் அவன் கையில் ஒப்படைக்கப் போறேன்!...உங்க பொண்ணு ஒண்ணுக்கும் ஆகாத உதவாக்கரையைக் காதலிக்கலை!...ஒரு பெரிய டிரான்ஸ்போர்ட் ஓனரைத்தான் காதலிச்சிருக்கா...அதனால்...எந்தப் பிரச்சினையும் பண்ணாம...ஒரு ஓரமா நின்னு கல்யாணத்தைப் பார்த்திட்டு...நல்ல வயிறு முட்ட சாப்பிட்டுட்டு ஊருக்குப் போங்க” என்று சொல்ல,

  

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.