ஒருவழியாக சில நிமிடங்களுக்கு பின் தன் உணர்வை திரும்பப் பெற்ற லாவண்யா, மெல்ல சுபாஷிடம் இருந்து விலகினாள்.
அப்போதும் மயக்கத்தில் இருந்த சுபாஷ்,
"லாவி... டார்லிங்... ப்ளீஸ்..." என்றான் கொஞ்சலாக...
"போதும் சுபாஷ், வேண்டாம்... இதெல்லாம் தப்பு, வீட்டுக்குப் போகலாம் வாங்க..."
மனமே இல்லாமல் விலகி அமர்ந்தவன்,
"அதெப்படி நான் சொன்ன அதே டையலாக்கை சொல்லி என்னை வெறுப்பேத்துற? சுபாஷ், உன் வாய் தான்டா உனக்கு எமன்... ஆனாலும் இன்னும் இரண்டு நாள் தானே, சரி பரவாயில்லை... அதுக்கு அப்புறம் உன்னை பார்த்துக்குறேன் லாவி...”
லாவண்யா புரியாமல் விழித்தாள்...
“என்ன பார்க்குற??? இரண்டு நாள்ல நமக்கு டும் டும் டும்..." என்ற சுபாஷ் செல்லமாக தன் நெற்றியால் லாவண்யாவின் நெற்றியில் முட்டி விட்டு ஜீப்பை திருப்பினான்.
"லாவி டார்லிங், உங்க அண்ணாக்கு நாம ஃபினான்ஷியலா ஏதாவது உதவி செய்யனுமா?"
"அதெல்லாம் வேண்டாம் சுபாஷ். அண்ணி சொன்னது எல்லாம் பொய். பிரஸ் நல்லபடியா தான் போகுது. இப்போ பேரை மாத்திட்டாங்க... அதனால தான் நல்லா போகுதுன்னு அவங்களே கதை சொல்லிட்டு இருக்காங்க..."
"பாவம் உங்க அண்ணன்..."
"ஆமாம்... அம்மா பார்த்து செலக்ட் செய்த பொண்ணு தான்... இப்படி ஆகும்னு யாருக்கு தெரியும். ஆனால் அண்ணா பசங்க இரண்டு பேரும் ரொம்ப ஸ்வீட்! அண்ணாக்கு இனி அவங்க
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Evergreen cute story, always my all time favorite