ஸ்பெஷலா சமைக்க போற, நான் சாப்பிட போறேன்... அதுவும் என் ஃபேவரைட் முறுக்கு செஞ்சு தந்தே ஆகணும்... மத்தபடி நம்மளை தவிர ஒரு ஈ காக்கா கூட அந்த பக்கம் வராது... அதனால நாம வந்த ஹனிமூன் வேலைக்கும் சௌகரியமா இருக்கும்..."
வெட்கமும் சந்தோஷமுமாக சுபாஷின் தோளில் சாய்ந்துக் கொண்டாள் லாவண்யா.
"ஏன் சுபாஷ், நான் உங்க கிட்ட ஒன்னு கேட்கலாமா??”
“ஒன்னு என்ன எவ்வளவு வேணா கேளு...”
“நிஜமாகவே காலேஜ்ல ஃபிரென்ட்ஸ் கிட்ட வச்ச பெட்’க்காக நீங்க என்கிட்டே பேசலையா?"
"பெட்டா? அதெல்லாம் எங்கே எனக்கு ஞாபகத்துல இருந்தது. உன்னை முதல் தடவை பார்த்ததில் இருந்தே நான் சொக்கில போயிருந்தேன்."
"அது எப்போ?
"உன் காலேஜ் ஃபர்ஸ்ட் டே, பாருங்கப்பா இந்த அண்ணாவைன்னு உங்க அப்பா கிட்ட செல்லம் கொஞ்சிட்டு இருந்த அப்போ..."
லாவண்யா நிமிர்ந்து சுபாஷைப் பார்த்தாள்.
"நிஜமாவா?"
"ஆமாம்... அப்போ இருந்தே உன்னை சைட் அடிக்க ஆரம்பிச்சாச்சு... நீயோ பெரிய படிப்ஸ், என்ன சொல்லி பேச்சை ஆராம்பிக்குறது, பசங்க கிண்டல் செய்யாம இருக்கனுமேன்னு யோசிச்சு நான் அமைதியா இருந்தா, அவங்களே பெட்’ன்னு சொல்லி எனக்கு வழி அமைச்சு கொடுத்தாங்க..."
மெல்ல சிரித்தவள்,
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Evergreen cute story, always my all time favorite