பேசியபடி இருவரும் வாசலை அடைந்திருந்தார்கள்... பேச்சு சத்தம் கேட்டு எட்டிப் பார்த்த ப்ரியா,
"அத்தை, ஹீரோ ஹீரோயின் வந்தாச்சு...!!!” என்று ராஜேஸ்வரிக்கு சத்தமாக அப்டேட் கொடுத்தாள்... பின் இவர்களிடம்,
“வாங்க வாங்க, லாவ்ஸ் & சுபாஷ்!!! அப்படியே ஹனிமூனுக்கு போயிட்டீங்களோன்னு நினைச்சேன்..." என்று மகிழ்ச்சிப் பொங்க அவர்களை வரவேற்றாள்...
"லாவி கூட அதே தான் சஜஸ்ட் செய்தா ப்ரியா... நான் தான் சரி போனா போகுது கல்யாணம் செய்துட்டு போகலாம்னு சொன்னேன்..." என்றான் சுபாஷ் சிரிப்புடன்.
லாவண்யா சுபாஷை பார்த்து முறைக்க, அவன் தன் வழக்கமான குறும்பு பார்வையை பதிலாக தந்தான்...
வெட்கம் மின்ன லாவண்யா முகத்தை குனிந்துக் கொண்டாள்!
"சரி சரி, போதும் இந்த டிராமா எல்லாம்! நாங்க எல்லோரும் கூட இங்கே இருக்கோம். ஞாபகம் வச்சுக்கோங்க..." என்று சொல்லி கலாட்டா செய்தாள் ப்ரியா.
"லாவண்யா, ப்ரியா உன்னோட ரூம் காமிப்பா... போம்மா போய் ரெஸ்ட் எடு... ப்ரியா, இரண்டு நாளுக்கு நீ தான் அவளுக்கு துணை... புரியுதா?" என்றாள் ராஜேஸ்வரி
"சரி அத்தை..." என்று பெரியவள் சொன்னதை உடனே ஏற்றுக் கொண்டாள் ப்ரியா.
************
லாவண்யாவை கைப் பிடித்து அழைத்துச் சென்ற ப்ரியா, அவளுக்கான அறையை காட்டினாள்... பின்,
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Evergreen cute story, always my all time favorite