சொல்றாங்கன்னு மட்டும் இல்லை மனோஜ்... எனக்கே இப்போ குழந்தை ஆசை வந்திருக்கு... நமக்கே நமக்கா, நம்ம அன்போட பிரதிபலிப்பா ஒரு குழந்தை... நினைக்கும் போதே புல்லரிக்குது...”
மனோஜ் ஆர்வம் மின்னும் கண்களுடன் அவளைப் பார்த்தான்...
“உங்களுக்கும் ஆசைன்னு எனக்கு தெரியும்... ஐ ப்ராமிஸ் யூ மனோஜ்... நம்ம அடுத்த வெட்டிங் அனிவேர்சரி வரதுக்கு முன்னாடி நாம ஒன்னா இருக்க மாதிரி ஏதாவது ஒரு ப்ளான் செய்துக்கலாம்...”
மனோஜ் தலையை தூக்கி அவளின் நெற்றியில் முத்தமிட்டான். மஞ்சு புன்னகைத்தாள்... அவளின் புன்னகையை பார்த்ததும் மனோஜின் முகத்தில் வெளிப்பட்ட காதல் உணர்வுகளை பார்த்து அவளுக்கு பெருமையாகவும் இருந்தது... கர்வமாகவும் இருந்தது... இவன் என்னவன், என் மனதை வென்றவன்... மனம் முழுக்க வழிந்த காதலுடன் மனோஜின் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்டாள் மஞ்சு...
அவளின் திடீர் சர்ப்ரைசில் கரைந்துப் போனவனாக மனோஜ் விழிகளை சிமிட்டவும், சிவந்த கன்னங்களுடன் மீண்டும் அவனின் மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள் மஞ்சு...
அவளின் தலையை மென்மையாக வருடிய மனோஜ்,
“எதுக்கு மஞ்சு கௌரவ் வீட்டுல இருந்து கிளம்பலாம் கிளம்பலாம்ன்னு சொல்லிட்டே இருந்த??” என்று குரலிலும் மென்மை சேர்த்துக் கேட்டான்.
“அந்த என்விரான்மென்ட் எனக்கு பிடிக்கலை மனோஜ்... எல்லா ஆபீஸ்லேயும் பாலிட்டிக்ஸ் இருக்கும். ஐஸ் வைக்குறவங்க இருப்பாங்க... ஆனா இங்கே என்னவோ கௌரவ் சீனியர் மேனேஜர் என்கிற ஒரே காரணத்துக்காக அவர் ஒய்ப்பை விட்டா கோவில் கட்டி கும்பிடுவாங்க போல இருக்கு... அவங்களுக்கு என்ன ஒரு ஐஸ் மழைன்னு நினைக்குறீங்க...”
“இது தான் காரணமா??? நீ என்னோட வந்தா உனக்கும் கூட அந்த ஐஸ் மழை, ஜால்ராஸ் எல்லாம் கிடைக்கும்... வரீயா???”