“ஹும்!” மஞ்சு பெருமூச்சை வெளியேற்றினாள்.
“இங்கே பாரு மஞ்சு, லைஃப் டைனமிக்கா தான் இருக்கும். ஒரு நாள் இருக்குறது ஒரு நாள் இருக்காது. ஒரு நாள் இருக்க சந்தோஷம் இன்னொரு நாள் இருக்காது. அதை எல்லாம் அப்படியே அக்ஸப்ட் செய்தா தான் வாழ்க்கையை அனுபவிக்க முடியும். “
“ஐயோ, முடியலை!!! என் பாட்டிக் கிட்ட பேசின எஃபக்ட் கொடுத்துட்ட! கல்யாணம் ஆகி ஒரு குழந்தைப் பிறந்ததும் இப்படி ஆன்ட்டியா மாறிட்டீயே அம்மு!”
“ஆன்ட்டின்னு எல்லாம் சொன்ன, எனக்கு கோபம் வந்திரும்! அடங்கு!”
“ஹா ஹா! நீ மட்டும் உண்மையை சொன்னா, நான் கேட்கனும்! நான் உண்மையை சொன்னா, உனக்கு கோபம் வருமாக்கும்? பாப்பா எங்கே சத்தத்தையே காணோம்???”
“நான் ஆபீஸ் வந்திருக்கேன் மஞ்சு.”
“ஆபீசா? அது எப்போ இருந்து?”
“வேலைன்னு இல்லை. சரா கம்பெனிக்கு இப்போ எல்லாம் அப்பபோ வந்து ஜெனரல் ஆபரேஷன்ஸ் தெரிஞ்சு வச்சுக்குறேன். அத்தையோட 24 பை 7 இருந்தா எனக்கு பைத்தியமே பிடிச்சிடும் போல இருந்தது!”
“ப்ச்... அவங்க இன்னும் மாறவே இல்லையா??”
“இன்னும் அதிகமா நச்சரிக்க ஆரம்பிச்சுட்டாங்கன்னு வேணா சொல்லலாம்!”
“சரா கிட்ட சொலல் வேண்டியது தானே?”
“அவர் எனன் செய்வார் மஞ்சு? டெய்லி அவர் வந்த உடனே என் மேல பத்து நிமிஷத்துக்கு