ஸ்ரீவர்தினியின் நிலைமை மதில் மேல் பூனை போல மாறியது, அவளது கை இன்னும் பரமனது நெஞ்சில் இருந்தது, இன்றுவரை தந்தை தவிர எந்த ஒரு ஆண்மகனின் நிழலையும் தொட்டதில்லை ஆனால், இன்று பரமனது செயலால் மனதளவில் பாதிக்கப்பட்டாள் வர்தினி, சில நொடிகளில் அவளையும் மீறி கண்களில் கண்ணீர் வர அதைக்கண்டு அதிர்ந்த பரமனோ
”ஏன் அழற” என மென்மையாகச் சொல்லி கையை எடுக்க உடனே தன் கையை எடுத்துக் கொண்டு ஓரமாக கதவை ஒட்டிக்கொண்டு தலைகுனிந்து அமர்ந்துக் கொண்டாள்.
அவளது செயலால் மனம் குழம்பிய பரமனோ காரை ஸ்டார்ட் செய்து மெதுவாக ஓட்டலானான். அந்நேரம் சரியாக ஸ்ரீரங்கனது ஃபோன் வரவே எடுத்துப் பேசினான்
”ஹலோ அண்ணா சொல்ணா” என்றான் பரமன்
”பரமா வர்தினி காணலைடா” என ஸ்ரீரங்கன் அலற அவனையும் தாண்டி கௌசியின் குரல் பரமனுக்கே கேட்டது
”அய்யோ என் அக்கா எங்க போனாள்ன்னு தெரியலையே, என்னாச்சின்னு தெரியலையே, தெரியாத ஊர்ல மாட்டிக்கிட்டாளே, முதலாளியை நம்பி வேலைக்கு வந்தா தொழிலாளிகளோட கதி இதுதானா” என அவள் கண்ணீர் விட்டப்படி ஒப்பாரி வைத்து பேசியது கேட்டு பரமனுக்கே கோபம் வந்தது
”அண்ணா அவள் வாயை முதல்ல மூடுங்க, வர்தினி என்கூடதான் இருக்கா” என பரமன் சொல்லவும் நிம்மதியான ஸ்ரீரங்கன் உடனே கௌசியிடம்
”கௌசி அமைதியா இரு, வர்தினி பரமன்கூடதான் இருக்காளாம் அமைதி” என அன்பாக சொல்ல அவளும் அமைதியானாள், தாரை தாரையாக கண்களில் வழிந்த நீரை துடைத்துக் கொண்டிருக்க அதைப்பார்த்த ஸ்ரீரங்கன் பரமனிடம்
”எங்கடா அவளை கூட்டிட்டுப் போன”
Sasirekha has written more than 33 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.