வீட்டினுள் சென்று தென்றல்வாணன் பார்த்த காட்சி மிகவும் கோரமாக இருந்தது. ரத்த வெள்ளத்தில் மிதந்து இறந்திருந்தாள் அந்த இளம்பெண்!
அவள் அணிந்திருந்த மஞ்சள் நிற சுரிதார் ரத்தத்தில் நனைந்து நிறம் மாறி இருந்தது.
அவளின் கண்கள் ஒரு துணியால் கட்டப்பட்டு இருந்தது.
அவளின் கைகள் அவள் அமர்ந்திருந்த அந்த குஷன் சேரின் பின்னே கட்டப் பட்டிருந்தது.
இரண்டு பக்கமும் நடந்தபடி இரு கோணத்தில் இருந்தும் பார்த்த தேன், மெல்ல பார்வையை சுற்றி அலைய விட்டான்.
வீடு சூறையாடப் பட்டிருந்தது!
பொருட்கள் எல்லா இடத்திலும் இறைந்துக் கிடந்தன.
தேனின் கூர்மையான விழிகள் ஒவ்வொரு பொருளையும் ஸ்கான் செய்தபடி அலைந்தது... நடந்துக் கொண்டே அசாதாரணமாக ஏதாவது கண்ணில் படுகிறதா என்று கவனித்தான்.
சட்டென அவனின் கண்கள் பளிச்சிட்டன!
"அபினவ், அந்த சேர் பக்கத்தில இருக்க யெல்லோ ஆப்ஜக்ட் பாருங்க!"
அபினவ் தேன் சுட்டி காட்டிய இடத்தில் இருந்த அந்த மஞ்சள் நிற சிகரெட் டப்பாவை கிளவ்ஸ் அணிந்த கைகளால் எடுத்து பிளாஸ்டிக் பேகில் பத்திரப் படுத்தினான்.
இந்திரா இறந்திருந்த இடத்திற்கு அருகிலேயே ரத்தம் தோய்ந்த லெதர் ஜாக்கெட்டும், ஒரு ஜோடி ஸ்போர்ட்ஸ் ஷூவும், கத்தியும் இருந்தன.
"திருடுவது தான் மோட்டிவ் என்றால் இப்படி கழுத்தை அறுத்து கொடூரமா கொலை செய்ய