தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 22 - நவ்யா
அடுத்து வந்த இரண்டு வாரங்கள் ஜனனிக்கு மிகவும் பிசியாக சென்றது.
அவளுக்கு புதிதாக நான்கு வாடிக்கையாளர்கள் வந்திருந்தார்கள். அவர்களுடன் பேசி, பிரச்சனை புரிந்து, கவுன்சிலிங் செய்வதிலேயே பெரும்பாலான நேரம் சென்றது.
ஆனால் தினம் தினம் மாலை நேரங்களில் உமேஷ் அவளை மொபைலில் அழைத்துப் பேசினான். முதல் இரண்டு நாட்களுக்குப் பிறகு ஜனனியே மாலை ஆறு மணி ஆனால் அவனின் அழைப்பை எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டிருந்தாள்!
உமேஷ் மட்டுமல்லாமல் ரஜினியும் கூட ஜனனியுடன் பேசினாள்.
உமேஷ் போல குறிப்பிட்ட நேரம் என்று இல்லாமல், தனக்கு நேரம் கிடைக்கும் போது அழைப்பாள் ரஜினி. அந்த நேரத்தில் ஜனனி பிச
...
This story is now available on Chillzee KiMo.
...
கதை பேசுவது பிடித்திருந்தது. அதனால் ஹாய் ஹலோ உடன், அன்று பார்த்த ஏதாவது, புதிய உடை பற்றி, புதிய உணவு பற்றி என்று எதையாவது சில நிமிடங்கள் பேசுவார்கள்.
இவ்வளவு விஷயங்களுக்கு நடுவே ஒரே ஒரு விஷயம் மட்டும் ஜனனியின் மனதை உறுத்திக் கொண்டே இருந்தது!
அவளும் உமேஷும் காதலர்களாக வேஷமிட ஆரம்பித்தது முக்கியமாக காருண்யாவிற்காக. அதன் தொடர்ச்சியாக தான் உமேஷ்