(Reading time: 9 - 18 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 24 - சசிரேகா

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

தில்லையோ போலீசிடம் சொல்லிவிட்டு நேராக ஜீப்பில் ஏறி வண்டியை ஓட்டினான். கடலூர் விட்டு சிதம்பரம் செல்ல வேண்டும், செக் போஸ்ட்டில் மாட்டிக் கொள்ள கூடாது, போலீசிடம் இருந்தும் தப்பிக்க வேண்டும் என்ற நிலையில் தில்லையும் வேகமாக வண்டியை ஓட்டினான்.

   

இதில் கடலூர் போலீசும் தன்னிடம் சிக்கிய இருவரையும் என்கவுன்டர் செய்துவிட்டு அந்த தகவலை மட்டும் மேலதிகாரியிடம் சொன்னான். இதில் கருணாவும் தில்லையும் தப்பித்து சென்றுவிட்டதாக சொல்லவும் மேலதிகாரியும் 

   

”அவங்க ரெண்ட பேருமே சிதம்பரத்தைச் சேர்ந்தவங்க, எப்படியோ போறானுங்க, நம்ம ஊருக்கு இவனுங்களால எந்தப் பிரச்சனையும் இல்லை, அதனால அவங்களை பத்தி நீ யோசிக்க வேணாம், என்கவுண்டர் பண்ண ரெண்டு பேரையும் கொண்டா போதும், அவங்க நம்ம ஊர்தானே அவங்களும் ஏதாவது தப்பு செஞ்சிருப்பாங்க, அதை வைச்சி நான் கேஸை க்ளோஸ் பண்றேன் இந்த விசயம் யாருக்கும் தெரிய வேணாம், போலீஸ் ரெக்கார்டுலயும் இப்படி ஒரு விசயம் நடந்ததா இருக்க வேணாம், ஏதாவது தகவல் எழுதி வைச்சா தேவையில்லாத பிரச்சனை வரும், நீ கிளம்பி வந்துடு, அந்த தில்லையும் கருணாவும் ஒரே ஊர்காரனுங்க, எங்கயாவது போய் சாகட்டும், நீ மாட்டிக்காத வந்துடு” என சொல்லவும் அவனும் நிம்மதியாகிப் போனான்.

   

இங்கு தில்லையோ செக் போஸ்ட் இருக்கும் இடங்களுக்கு செல்லாமல் வேறு பக்கமாக பாதை கரடு முரடாக இருந்தாலும் கவலைப்படாமல் ஜீப்பை ஓட்டினான்.

   

கடலூர் விட்டு சிதம்பரம் வரும் வரை யாரும் யாரிடமும் பேசவில்லை, இதில் சம்யுக்தா வழியில் மயங்கியே விட்டாள். அதைக் கூட பார்க்காமல் அவசரமாக சிதம்பரம் வந்து சேர்ந்தான் தில்லை.

   

இங்கு சிவாவோ தில்லை வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தனது போலீஸ் வண்டியுடன் காத்திருந்தான், கருணாகரன் வந்ததும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என இருந்தான்.

   

தில்லையின் வண்டி வரவும் சிவாவோ செந்திலிடம்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.