”செந்திலு, தில்லை வரான் கருணாவை பிடிச்சி வைச்சிக்க” என சொல்ல அவனும் ஆர்வமானான்
தில்லையும் வண்டியை தனது அடுக்குமாடி குடியிருப்பு முன் நிறுத்த சிவாவும் செந்திலும் தில்லையிடம் வந்து சல்யூட் வைத்தார்கள்
”கருணா எங்க?“
”பின்னாடியிருக்கான்” என சொல்ல சிவா செந்திலை பார்த்து
”போய் கருணாவை கைது பண்ணு”
என சொல்ல அவனும் சென்றான், அவனுக்கு சித்தன் உதவி செய்தான்.
சிவாவோ தில்லையிடம்
”கருணாவோட ஆளுங்க எல்லாரும் வந்து சேர்ந்துட்டானுங்க, நல்லவேளை இவனுங்களை எல்லாரையும் நீ கொல்லாம கூட்டிட்டு வந்தியே, இல்லைன்னா பெரிய பிரச்சனையாயிருக்கும்”
“கொல்லனும்னு நினைச்சேன் ஆனா, அதுக்குள்ள வேற பிரச்சனை வரவும் மனசை மாத்திக்கிட்டேன்”
“வேற பிரச்சனையா என்னது, கடலூர் போலீஸ் ஏதாவது உன்கிட்ட பிரச்சனை பண்ணாங்களா“
”இல்லை“
”வேற என்ன” என கேட்க அவனோ சம்யுக்தாவை காட்டினான்