“சரி சரி கிளம்பறேன், எப்படியோ இந்த ஊர் ரௌடி கருணாகரன், அவனை பிடிக்கற பொறுப்பு என்கிட்ட கொடுத்தாங்க, இவன் வேற கடலூர்ல போய் ஒளிஞ்சிக்கவும் எனக்குத்தான் பிரச்சனை வந்தது. எனக்கு முன்னாடி கடலூர்க்காரங்க இவனை பிடிசசிருந்தா நமக்குதான் அவமானம், எப்படியோ நீயே பிடிச்சிட்ட, இதை வைச்சே எனக்கு நல்ல பேர் கிடைக்கும் ப்ரமோஷனும் கிடைக்கும்” என உற்சாகமாகச் சொல்ல
”அவசரப்படாத கருணா மேல இந்த ஊர்லதான் நிறைய வழக்குகள் பதிவாகியிருக்கு, அவனும் நிறைய தப்புக்கள் செய்துட்டான், அதனால நீ அவனை கைது செய்த, இதை வைச்சி உனக்கு நல்ல பேர் வேணா கிடைக்கும் ஆனா, ப்ரமோஷன் கிடைக்காது உனக்கு ப்ரமோஷன்னு கிடைக்கனும்னா என்னை நீ பிடிச்சி கைது செய்யனும் அப்பதான் ப்ரமோஷன் கிடைக்கும்”
”உன்னைத்தானே எப்பன்னு சொல்லு பிடிச்சிடறேன்”
“அது உன்னால முடியாது”
”அது என்னவோ உண்மைதான், எப்படியோ கருணாவோட கேஸ் க்ளோஸ் ஆயிடுச்சி, இனி என்ன செய்றது”
”இன்னும் எதிரிங்க இருக்காங்க, அவங்க கதையும் முடிச்சிட்டா எனக்கு நிம்மதி, அப்புறம் இந்த சிதம்பரமே என் கன்ட்ரோல்ல வந்துடும், அப்ப நான்தான் ராஜாவா இருப்பேன், நீ மந்திரியா இரு, என்னை யாராலயும் எதுவும் செய்ய முடியாது”
”இருக்கற எல்லா ரௌடி தாதாக்களையும் கொன்னு நீ ராஜாவா ஆனாலும் உன் மேலயும் என்கவுன்டர் பண்றதுக்கு ஆர்டர் வந்துடுச்சி, அதை மறந்துடாத, உன் உயிரும் ஊசலாடுது தில்லை கவனம்“
”நான் பார்த்துக்கறேன் நீ கிளம்பு”
”எப்படியோ இவனை உசுரோட கொண்டு வந்தியே, எங்க நீ வழக்கம் போல கொன்னுட்டு