(Reading time: 9 - 18 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

நீங்க என்ன வேணும்னாலும் செய்வீங்களே, பணத்தை வாங்கிட்டு அவருக்கு உதவி செய்ற நீங்களும் கண்டிப்பா ஒரு நாள் மாட்டிக்குவீங்க” என்றாள். அதைக்கேட்டு சிவாவும் தில்லையும் கலகலவெனச் சிரித்தார்கள். அதில் அவளுக்கு அவமானமே வந்தது.

   

அதில் அவளோ சிவாவிடம்

   

”நான் கேஸ் போட மாட்டேன், எனக்கான நியாயத்தை நானே தேடிக்கிறேன், நீங்க எனக்கு உதவ வேணாம் முடிஞ்சா இவன்கிட்டயிருந்து உங்களை காப்பாத்திக்குங்க, இல்லைன்னா இவன் தன்னை காப்பாத்திக்க என் வாழ்க்கையை அழிச்ச மாதிரி உங்க வாழ்க்கையும் அழிப்பான்”

   

”ஆமாமாம் நீ சொல்ற மாதிரியும் நடக்க வாய்ப்பிருக்கு” என சிவா சொல்ல அதற்கு தில்லையோ அவனை சந்தேகமாகப் பார்த்து

   

”இப்ப நீ என்னதான் சொல்ல வர்ற“ என கேட்டான்

   

”சும்மாடா சரி அதை விடு நேரா விசயத்துக்கே வரேன்”

   

”என்ன விசயம்”

   

”கருணாவை போலவே இனி நீ எந்த ரௌடியை பிடிச்சாலும் சரி கொன்னுடாத, என்கிட்ட ஒப்படை, நான் பார்த்துக்கறேன் அப்படியே நீ அவனை கொல்ல வேண்டிய சூழ்நிலை வந்தாலும் சரி பரவாயில்லை, புதைச்சிடாத, என்கிட்ட பாடியை கொடுத்துடு, நான் என்கவுண்டர் பண்ண மாதிரி விசயத்தை சரி பண்ணி எல்லாரையும் நம்ப வைச்சிடறேன், தயவு செஞ்சி தலைமறைவுன்னு மட்டும் சொல்லிடாதடா, எனக்கும் பிரச்சனையாயிடும், உனக்கும் பிரச்சனையாயிடும், அப்புறம் என்னால உன்னை காப்பாத்த முடியாது, என்னைக் காப்பாத்திக்க உன்னை என்கவுண்டர் பண்ற நிலைமை வந்தாலும் நான் தயங்க மாட்டேன் தில்லை இப்பவே சொல்லிட்டேன்”

   

”சரி சரி இனிமேல யாரையும் கொன்னு தலைமறைவாயிட்டான்னு சொல்லலை போதுமா, 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.