(Reading time: 9 - 18 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

கவலைப்படாம இப்படி பேசறீங்க, இதோ இவனை நீங்க அரஸ்ட் பண்ணியிருக்கலாம்ல ஏன் அப்படி செய்யலை” 

   

”அதுக்கு இன்னும் நேரம் வரலை” என சிவா சொல்ல 

   

”ஏன் வரலை இவரும் கெட்டவர்தானே, பாருங்க எத்தனை பேரை கொன்னிருக்கார்ன்னு இவரை கைது பண்ணுங்க ஜெயில்ல போடுங்க” என ஆவேசமாக சொன்னாள் சம்யுக்தா, அதைக் கேட்ட சிவாவோ

   

”ஆமாம் இவன் கெட்டவன்தான் ஆனா, இவன் மேல எந்த கேசும் இல்லையே, எப்ஐஆர் இல்லை, இவன் கொன்னாங்கறதுக்கான ஆதாரமும் இல்லை, எப்படி இவனை நான் கைது செய்றது”

   

”சரி என்கவுன்டராவது பண்ணிடுங்களேன்”

   

“பண்றேன்மா இப்ப இல்லை கொஞ்ச நாள் போகட்டும்”

   

”கண்ணு முன்னாடி நிக்கறவனை சுடக்கூட உங்களால முடியாதா”

   

”அதுசரி நீங்க சொன்னா ஆச்சா, ஒருத்தனை என்கவுன்டர் பண்றது ரொம்ப சுலபமில்லை, என்கவுன்டர் பண்ண பின்னாடி செத்தவனைப் பத்தின தகவல்கள் கேட்பாங்க, அதை எல்லாம் தரனும், என்கிட்ட தில்லை சம்பந்தமா எந்த ஆதாரங்களும் இல்லை, இது போல தில்லை இந்த ஊர்ல தாதாவா சுத்தறான், அதனால அவனை கைது செய்யச் சொன்னாங்க, எந்த கேசும் பதிவாகலைன்னு சொன்னதால சரி என்கவுன்டர் பண்ண சொன்னாங்க, அதை செய்தாலும் சரியான தகவல் இல்லைன்னா எனக்கும் பிரச்சனை வரும், இவன் ஏதாவது தப்பு செய்யட்டும், நானே அவனை கைது செய்றேன் வேணும்னா நீங்க இவன் மேல ஒரு கேஸ் போடுங்க கைது செய்றேன்” என ஆசையாக சிவா சொல்ல, தில்லையோ நக்கலாக சிரிக்க அதைக் கண்ட சம்யுக்தாவோ 

   

”என்ன கிண்டல் பண்றீங்களா, நீங்களே அவருக்கு விசுவாசியா இருக்கீங்க, நான் கேஸ் தந்தாலும் அதை ஒண்ணுமில்லாம ஆக்க உங்களால முடியாதா என்ன, அவரை காப்பாத்த 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.