”இவளையும் ஏன்டா கூட்டிட்டு போன“
”வேண்டுதல் எனக்கு, நீ ஒண்ணு, வேணாம் வராதன்னு சொன்னா கேட்டாதானே”
”ஆமா ஏன் அவள் தூங்கறா“ என சிவா கேட்க அதற்கு தில்லை
“தூங்கலை மயக்கமா இருக்கா“
”அடப்பாவி உன்னை என்ன சொல்றதுன்னே தெரியலை, பாவம்டா அந்த பொண்ணு, அவளை முதல்ல காப்பாத்து“
”ம் காப்பாத்தறேன்” என சொல்லியபடியே அவளை உலுக்கினான். அதில் அவளும் சற்று அசைந்தாள்.
”ம்ம்ம்” என முனக அவனோ
”பத்திரமாதான் இருக்க, கண்ணை திற, வீடு வந்துடுச்சி இறங்கு” என சொல்ல அவளும் மெல்ல கண்விழித்து சுற்றி முற்றிப் பார்த்தாள், தில்லையும் வண்டியை விட்டு இறங்கி நின்றான். சம்யுக்தாவும் இறங்கி என்ன நடக்கிறது என பார்த்துவிட்டு சிவாவும் தில்லையும் பேசுவதைக் கேட்டாள்.
அவனின் உடலில் ஏற்பட்டிருந்த காயத்தைக் கண்டு சிவாவோ அவனிடம்
”உனக்கு காயம் பட்டிருக்கு தில்லை”
”ஆமாம் சும்மா வெட்டுதான் பார்த்துக்கலாம்”
“டாக்டர்கிட்ட போய் வா“
”அது அப்புறம் முதல்ல நீ இங்கிருந்து கிளம்பு”