(Reading time: 9 - 18 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

தலைமறைவுன்னு சொல்லிடுவியோன்னு பயந்தேன்“

   

”ஏன் அப்படி பயப்படற சிவா”

   

”ஆமாம் நீ ஒருமுறை தலைமறைவுன்னு சொன்னாலே அவன் உசுரோட இல்லைன்னுதானே அர்த்தம், கொன்னு எங்கயாவது புதைச்சிட்டல்ல வருவ, இதோட 10 ரௌடிகளை புதைச்சிட்டு தலைமறைவுன்னு சொல்லிட்ட, நானும் மேலதிகாரிகள் கிட்டயும் மீடியா, நியூஸ்பேப்பர் எல்லார்கிட்டயும் தலைமறைவுன்னு சொல்லி சமாளிச்சேன், அவங்களும் முதல்ல நம்பினாங்க ஆனா, கடைசி கடைசியா நம்பாம சந்தேகப்பட்டாங்க, இப்ப மட்டும் நீ கருணாவை கொன்னு புதைச்சிட்டு தலைமறைவாயிட்டான்னு சொல்லியிருந்தா கண்டிப்பா என் மேல சந்தேகம் வந்திருக்கும், நீயும் போலீஸ்கிட்ட பிடிபட்டிருப்ப”

   

”நானும் அவனை கொல்லத்தான் நினைச்சேன். இதோ இவளாலதான் முடியலை, வேற வழியில்லாம உயிரோட பிடிக்க வேண்டியதா போச்சி, இல்லைன்னா இவனையும் கொன்னு அங்கயே புதைச்சிட்டு தலைமறைவுன்னு உனக்கு தகவல் சொல்லியிருப்பேன்“

   

”தலைமறைவா அப்படின்னா வேற ஊர்ல போய் ஒளிஞ்சிக்கறதுதானே அர்த்தம், நீங்க என்ன வித்தியாசமா சொல்றீங்க” என சம்யுக்தா கேட்க அதற்கு சிவா அவளிடம் விளக்கம் தந்தான்

   

”அதுவா அது ஒண்ணுமில்லைங்க, எங்க பாஷையில தலைமறைவுன்னு கோட்வேர்ட் ஒண்ணு இருக்கு அதை இவன்தான் கண்டுபிடிச்சான். ஒருத்தனை கொன்னுட்டா செத்தவனை தலைமறைவாயிட்டான்னு சொல்லிடுவோம், அப்படின்னா அவன் செத்துட்டான்னு அர்த்தம், அவன் எந்த இடத்தில எந்த ஊர்ல சாகறானோ அங்கயே அவனை புதைச்சிட்டு தில்லை வந்துடுவான், இப்படியே 10 பேரையும் கொன்னுட்டு, எங்க கொன்னானோ அங்கயே புதைச்சிட்டு வந்துட்டான், என்கிட்டயும் அவங்க தலைமறைவாயிட்டாங்கன்னு சொல்லிடுவான், நானும் புரிஞ்சிக்குவேன் சரி தில்லை அவனை கொன்னுட்டான்னு, அதுக்கு ஏத்த மாதிரி கேஸை க்ளோஸ் பண்ணிடுவேன். இந்த முறைதான் உங்க புண்ணியத்தில கருணாவை உயிரோட பிடிச்சிட்டு வந்து ஒப்படைச்சான், அதுக்காக உங்ககிட்ட நான் நன்றி சொல்லிக்கிறேன். என சொல்ல அவளுக்கு சிவாவை பிடிக்காமல் போனது

   

”சே நீங்க ரொம்ப மோசம் செத்தவன் கெட்டவனா இருக்கறதால அவன் சாகறதை நினைச்சி 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.