"உங்க மகள் மணிமேகலைக்கு லாஸ்ட் இயர் ஆக்சிடென்ட் ஆச்சு. இங்கே இருக்க டாக்டர்ஸ் எல்லாம் கையை விரிச்சிட்டாங்க. ஆனாலும் காசு செலவு செய்து வெளிநாட்டில் இருந்து டாக்டரை அழைச்சிட்டு வந்தா காப்பாற்றிடலாம்னு நீங்க நம்புனீங்க. அதற்கான முயற்சியிலும் இறங்குனீங்க... அமெரிக்காவில் பிரபலமான டாக்டர் ஒருவர் வரேன்னு ஒத்துக்கிட்டார்... ஆனால் அவருக்கு செலவு செய்ய உங்களுக்கு நிறைய பணம் தேவை பட்டது! கோடிகணக்கில் பணம் தேவைப்பட்டது. உங்க கிட்ட அவ்வளவு பணம் இல்லை. உங்களுடைய இடங்கள், ஏன் வீடு கூட கடனில் மூழ்கி இருந்தது. ஆனால் உங்க மகன் முத்துக்குமார் நல்ல நிலமையில இருந்தார். அவருக்கு தங்கை மேல பாசமும் நிறைய உண்டு..."
"இன்ஸ்பெக்டர்..."
"இருங்க முத்துக்குமார், நான் பேசி முடிச்சிடுறேன்! முத்துக்குமார் பணம் தரேன்னு ஒத்துக்கிட்டார். நீங்க டாக்டரிடமும் எல்லா அரேஞ்மென்ட்டும் செய்திட்டதா சொன்னீங்க. ஆனால் கடைசி நிமிஷத்தில எல்லாத்தையும் கேன்சல் செய்ய வேண்டியதாச்சு! ஏன்னா அமெரிக்காவில் இருந்து கிளம்பும் முன் தரணும்னு அந்த டாக்டர் சொன்ன பீஸை உங்களால கட்ட முடியலை. இதனால உங்க செல்ல மகள் இறந்துட்டா. அமெரிக்க டாக்டர் வர முடியாமல் போனதற்கு காரணம் உங்க மருமகள் இந்திரா. முத்துக்குமாரை கட்டாயப் படுத்தி ஏதேதோ சொல்லி மிரட்டாத குறையா பேசி பணம் தர மாட்டேன்னு சொல்ல வச்சுட்டாங்க. சோ உங்களுக்கு உங்க மருமகள் மேல கோபம்... பகை...
இன்னைக்கு காலையிலே உங்க மகன் ஜாகிங் போயிருப்பது தெரிஞ்சுட்டு அவர் வீட்டுக்கு போனீங்க. ஜன்னல் வழியா உங்களை பார்த்ததால கேள்வி கேட்காமல் இந்திரா கதவை திறந்தாங்க. அவங்க கிட்ட பேச்சுக் கொடுத்த படி, அவங்க எதிர்பார்க்காத நேரம் கட்டி போட்டுட்டு கொடூரமா கொலை செஞ்சீங்க! அது வெளியே தெரியாமல் மறைக்க திருட்டு நடந்ததா சீன் க்ரியேட் செய்ய மேஜை மேல இருந்த பொருட்களை தூக்கி போட்டீங்க! பீரோ, லாக்கரை திறந்து பணம் நகை எல்லாம் எடுத்துட்டு கதவை மூடிட்டு கிளம்பிட்டீங்க."
"ரிடிகுலஸ் இன்ஸ்பெக்டர்!"
"முத்து, நீ அமைதியா இரு! சார், நான் காலையில வீட்டில தான் இருந்தேன். என்