“ப்ச்... ஈவ்னிங் சீக்கிரம் வந்திருவேன் pbs...”
“ஓஹோ...”
“ஃப்ரைடே மட்டும் லேட்டாகும்... மத்தபடி இன்னும் கொஞ்ச நாளுக்கு டான்னு ஈவ்னிங் வந்திருவேன்...”
“அதென்ன ஃப்ரைடே மட்டும் ஸ்பெஷல்???”
“அமுதாவும் சரவணனும் அன்னைக்கு டின்னர் போகலாம்னு சொல்லி இருக்காங்க...”
“ஒ... அப்போ சரி...! மெதுவா கார் டிரைவ் செய்துட்டு போங்க... மறக்காம எனக்கு டைம் கிடைக்கும் போது கூப்பிடுங்க...”
“பை pbs...”
மஞ்சுவின் நெற்றியில் முத்தமிட்டு காரில் கிளம்பியப் போதும் மனோஜின் மனம் மஞ்சுவுடனே தான் இருந்தது...
அவளுடன் பேசியதை மீண்டும் அசைப் போட்டுப் பார்த்தான்... அமுதாவிடம் மஞ்சு என்ன சொன்னாள் என்பதை மஞ்சு இன்னமும் அவனிடம் சொல்லவில்லை என்பது இப்போது தான் புரிந்தது...!
அவனும் கூட தான் வாய்ப்பு இருந்தப் போதும் அமுதாவிடம் மஞ்சு குறித்து எதுவும் சொல்லவில்லை...
இதைப் பற்றி இப்போதைக்கு அதிகம் யோசித்து குழம்ப வேண்டாம் என்று முடிவு செய்து, அந்த விஷயத்தை பின்னுக்கு தள்ளினான் மனோஜ்...!
மீண்டும் மஞ்சுவை பற்றி யோசித்தான்... தானாக அவனின் மனதுள் மந்தகாசம் வந்தது...