எனக்கு இப்போ சொல்லக் கூட பிடிக்கலை தான்... ஆனால் இதெல்லாம் உண்மை... நான் மஞ்சு கிட்ட எப்படி நடந்துக்குறேன்னு என்னால உணரவே முடியாத அளவுக்கு அவ்வளவு ப்ரெஷர்... வேற வேலை தேடலாம்னா அதுல இன்னும் நிறைய பிரச்சனைங்க... விசா ஸ்பான்சர்ஷிப் ஆரம்பிச்சு எத்தனையோ... நானே ரொம்ப அப்செட்டா இருந்தேன்... அந்த நேரத்துல மஞ்சு உன் வழியா ரெகமென்டேஷன்னு பேசவும் எனக்கு ரொம்ப கோபம் வந்திருச்சு... அவளும் என்னை திறமை இல்லாதவன்னு நினைக்குறதா தோணிச்சு அதனால தான் ஹார்ஷா அவக் கிட்ட ரெஸ்பான்ட் செய்தேன்...”
அமுதா முகத்தில் இருந்த அலுப்பெல்லாம் காணாமல் போயிருந்தது...
“ஹார்ஷா சொன்னீங்களா??” என்றுக் கேட்டப் போது அவளின் குரலில் இருந்த காரம் பல மடங்காக உயர்ந்திருந்தது...
மனைவியை பற்றி அறிந்தவன் என்பதால், சரவணன்,
“அமுதா, மனோஜ் மஞ்சுவோட ஹஸ்பன்ட்...” என்று குறுக்கே பேச முயன்றான்...
“அதுக்காக???” என்றாள் அமுதா இன்னும் அதிக கோபத்துடன்...
“மஞ்சு உன் கிட்ட என்ன சொன்னான்னு எனக்குத் தெரியாது. ஆனால், அவள் நான் சொன்னதை அப்படியே உன் கிட்ட சொல்லலைன்னு எனக்குப் புரியுது... என்னை விட உனக்கு மஞ்சுவை நிறைய வருஷமா தெரியும் அமுதா... மஞ்சு என்ன சொல்லி இருந்தாலும் அதை எப்படி நீ இப்படி உண்மைன்னு னியாநிசு பர்சனலா எடுத்துக்கிட்டேன்னு எனக்குப் புரியலை...”
“மனோஜ்!!!”
“எப்படியும் நான் ரெகமென்டேஷன்ல வர வேலையை அக்ஸப்ட் செய்திருக்க மாட்டேன் அமுதா... எனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு...”
சரவணன் புரிந்துக் கொண்டவனாக தலையை அசைத்தான்...