“அமிர்தா அவ பிரெண்ட்ஸ் கூட இங்கே வந்தப் பிறகு அவ மொபைல்ல ஒரு போன் வந்தது. அமிர்தா போனை கீழ வச்சுட்டு வேற எங்கேயோ போயிருந்தா. நான் தான் எடுத்துப் பேசினேன். அந்த பக்கம் பேசினவன் பேரு தமிழ்...”
அமிர்தா ராஜசுலோசனாவின் பேச்சில் குறுக்கிட்டாள்.
“என்னம்ம்மா நீங்களும் அதே பேரை சொல்றீங்க? எனக்கு அந்த பேருல யாரையும் தெரியாதே!”
“உனக்கு தெரியாது அமிர்தா, ஆனால் அவனுக்கு உன்னை தெரியும்... ஒரு பர்த்டே பார்ட்டிக்கு நீ போயிருந்தப்போ உனக்கே தெரியாமல் மயக்க மருந்து கொடுத்து, உன்னை... ... ரொம்ப கேவலமா போட்டோ எடுத்து வச்சிருந்தான்.”
“அம்மா!” அமிர்தா அதிர்ந்துப் போனாள்!
“எனக்கும் கேட்டப்போ அதிர்ச்சியா இருந்தது. என்ன செய்றதுன்னு தெரியலை. நான் உன் அம்மான்னு தெரிஞ்சப் பிறகு நேராவே வந்து போட்டோஸ் காட்டுறேன்னு சொன்னான். அன்னைக்கு நைட் சொன்னது போல வந்து போட்டோஸ் காட்டினான். என் குழந்தையை கேவலமா...” சுலோச்சனாவின் குரல் உடைந்து போனது... கண்ணீருடன் பேசுவதை அவள் நிறுத்த, திலீப் தொடர்ந்தான்.
“என்ன செய்றதுன்னு புரியாமல் ஆன்ட்டி என் கிட்ட விஷயத்தை சொன்னாங்க. அமிர்தா கிட்ட சொன்னால் அவ தாங்கிக்க மாட்டான்னு எங்களுக்கு தெரியும். அதனால அவளுக்கு தெரியாமல் டீல் பேசி இதை முடிக்குறதுன்னு முடிவு செய்தோம். நாங்க அஞ்சு லட்சத்தில் ஆரம்பிச்சு அம்பது லட்சம் வரைக்கும் பேசினோம், ஆனால் அவன் அம்பது கோடி கேட்டான். இரண்டு மூணு தடவை வந்து அவன் ஆன்ட்டியோட பேரம் பேசி எதுவும் நடக்காமல் போகவே, அடுத்த தடவை அவன் வரும் போது நான் வரேன்னு சொல்லி இருந்தேன். விஷயம் யாருக்கும் தெரியாமல் இருப்பது தான் நல்லதுன்னு முடிவு செய்து யார் கிட்டேயும் நாங்க சொல்லலை. “
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.