(Reading time: 8 - 15 minutes)
Inspector Then
Inspector Then

செய்யப் பட்டது வீட்டுலன்னு காட்டிடுச்சு... திலீப்போட மொபைல் ரெகார்ட் படி இந்த இன்சிடன்ட் நடந்ததா நாம சொல்ற நேரத்துக்கு பக்கத்திலேயே இந்த வீட்டுல இருந்து கால் வந்திருக்கு. கூடவே அவர் அதை அட்டன்ட் செய்தது வீட்டுக்கு பக்கத்துலன்னு மொபைல் டவர் சிக்னல் ட்ரேஸ் காட்டிச்சு... சோ அவர் காலையில ஒன்பது மணிக்கு தான் வந்தேன்னு சொல்றது பொய்ன்னு புரிஞ்சது...’

  

“குட் ஜாப் யங் மென்!”

  

“தேங்க்ஸ் சார், அப்போ நான் திரும்ப ஊருக்கு கிளம்புறேன் சார்...” என்றான் வினோதன்.

  

“யெஸ் வினோதன்!  இந்த கேஸ்ல உங்க உதவிக்கு ரொம்ப நன்றி.”

  

“வெல்கம் சார்!”

  

“சார், எனக்கு ஒரு ஒரு வாரம் லீவ் வேணும்...” என்றான் தென்றல்வாணன்.

  

“என்ன தேன் திடீர்னு லீவ் எல்லாம்?”

  

என் மாமனாருக்கு உடம்பு சரியில்லை சார்... ஊருக்கு போகணும்...”

  

“ஒ! ஐ கெட் இட்! நீங்க போயிட்டு வாங்க!”

  

“தேங்க்ஸ் சார்.”

  

“அப்புறம் பிரஸ்ல இந்த கேஸ் ரொம்ப பரபரப்பா வரும்... உங்க பேட்டி எல்லாம் கூட வரும்... திலீப், சுலோச்சனா அரெஸ்ட் பத்தி கேட்கும் போது இப்போதைக்கு எதையும் ஷேர் செய்யாதீங்க.”

  

“ஓகே சார்... புரியுது... எப்படியும் பெரிய லாயர் பிடிச்சு அவங்க இந்த வழக்குல இருந்து விடுதலை ஆகிடுவாங்க...”

  

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.