(Reading time: 8 - 15 minutes)
Inspector Then
Inspector Then

 

“அதை விடுங்க, உங்க வேலை பத்தி சொல்லுங்க. அந்த ஊரு எப்படி?” என பேச்சை மாற்றினார் விஜயநாதன்.

  

சிறிது நேரத்திற்குப் பிறகு, கணவனை தனியாக சந்திக்க வாய்ப்பு கிடைத்தப் போது,

  

“சாரிங்க... அம்மாவை பத்தி உங்களுக்கு தெரியும்... தப்பா எடுத்துக்காதீங்க... “ என்றாள் சத்யா.

  

மெல்ல தலை அசைத்து, அவளின் கன்னத்தில் முத்தமிட்டான் அவன்.

  

“இல்லை சத்யா, அவங்க சொன்னதை முழுசா தப்புன்னு சொல்ல முடியாது. அவங்க பொண்ணை லவ் செய்றேன்னு சொல்லி வீரமா பேசி பொண்ணு கேட்குறது ஈசியா இருந்தது. நமக்கு இப்போ ஷாலினி தானே எல்லாமேன்னு தோணுது... ஷாலினி வளர்ந்து அப்படி நம்மக் கிட்ட பேசினா எப்படி இருக்கும்!”

 

“ஏன், உங்க பொண்ணை யாருக்கும் கல்யாணம் செய்து தர மாட்டீங்களா என்ன? அதெல்லாம் நடக்கும் போது நடக்கும்! இருந்தாலும், எங்கம்மா கிட்ட அப்படி நேரா வந்து கேட்கவும் கெத்து வேணும்! அது உங்க கிட்ட இருந்துது. ஐ லைக் இட்!”

 

“இல்லை சத்யா, காதல் முக்கியம் தான்... ஆனால் அம்மா அப்பா பாசமும் முக்கியம் தானே...! உங்கம்மா உன் வாழ்க்கை எப்படி எப்படி எல்லாமோ இருக்கும்னு நிறைய கனவு வச்சிருந்திருப்பாங்க!”

 

“இப்போவும் எதுவும் கெட்டுப் போகலைங்க. நான் நல்லா தான் இருக்கேன். சந்தோஷமா தான் இருக்கேன். அம்மாவை நாம புரிஞ்சுக்கனும்னா அவங்களும் நம்மளை புரிஞ்சுக்கனும்! அதைப் பத்தி கவலைப் படாம அவங்க கனவு கண்டா அது அவங்க பிரச்சனை!”

 

“அப்படி சொல்லாதே சத்யா. என் வாழ்க்கையில அன்புன்னு ஒன்னை உன் கிட்ட இருந்து தான் நான் தெரிஞ்சுகிட்டேன்... அவங்க உன் அம்மா...”

 

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.