(Reading time: 7 - 14 minutes)
Manasa Theevu
Manasa Theevu

குழந்தையை வாங்கி கொண்டான். இருவர் கண்களிலிருந்தும் இரண்டு சொட்டு கண்ணீர்.

  

"எந்தா நாயர் கரையறது?" என்று மானசா கேட்கவும், ஒரு சிரிப்புடன்

  

"எத்தரை லைபில் வேஸ்ட் செய்தோம் என்று யோசிச்சேன், அதான்...."

  

"அதெல்லாம் சரி செய்ஞ்சுறலாம் நாயர்!"

  

"செய்யும், சரி செய்யும், இந்த மாதவன் எல்லாம் சரி செய்யும்" என்று கூறி தன் குழந்தையை அணைத்துக் கொண்டான், அதில் அவன் பாசம், அன்பு எல்லாம் தெரிந்தது மானசாவிற்கு.

  

இவனை இத்தனை நாளாய் நாம் புரிந்துக் கொள்ளவில்லையோ என்று நினைத்தாள்.

  

" எந்தா மானசி, என்னையே நோக்கறது? "

  

"ஒண்ணுமில்ல நாயர், இத்தரை நாள் வேஸ்ட் செய்துட்டோம்னு நினைச்சேன், மனசு கொஞ்சம் கஷ்டமாயிருக்கு"

  

அவளை அணைத்துக் கொண்டு " எல்லாம் சரி செய்யலாம் மானசி, இப்போ எனக்கு புது உயிர் வந்த மாதிறி இருக்கு...எனக்கு நீயும் நம்ம குழந்தைகளும் சந்தோஷமா இருக்கணும், அது நடக்கும், அதுக்கு நான் பொறுப்பு..." என்று நெகிழ்ச்சியுடன் கூறினான் .

  

அதை கேட்ட அவள்,அவன் தோளில் சாய்ந்தாள், அவனுடன் ஒட்டி உட்கார்ந்தாள் " நாயர், மத்த குழந்தைகளையும் பார்க்க வேணாமா?"

  

"போலாம் வா மானசி, நம்ம எல்லா குட்டிகளோடும் சேர்ந்து உட்காருவோம் வா மானசி"

  

அவர்கள் சென்று குழந்தைகளுடன் விளையாடினார்கள், சின்னவன் ஆனந்தன், அவனை தூக்கி தன் மடியில் வைத்து விளையாடினாள், அவனும் தன் குழந்தைகளுக்கு கதை சொன்னான், குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு, அவர்களை தூங்க வைக்கும் வரை அவர்கள்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.