அதை ஆமோதிப்பவளாக விழிகளை மெல்ல மூடி திறந்தாள் மஞ்சு...
“நிஜமா... நிஜமா pbs??? உண்மையாவா???”
அவனின் மகிழ்ச்சியை... அவன் அதை வெளிப்படுத்திய பாங்கை மனதார ரசித்துக் கொண்டே அவனை அணைத்துக் கொண்டாள் மஞ்சு...
“நிஜமா தான் மனோஜ்... உங்களுக்கு நான் அப்பான்னு ப்ரோமோஷன் தரலாம்னு இருக்கேன்...”
மனோஜின் கரங்கள் தன்னை அணைத்திருந்த மஞ்சுவை இன்னும் இறுக்க அணைத்துக் கொண்டது...
“pbs, இன்னைக்கு தான் என் வாழ்க்கையோட ரொம்ப சந்தோஷமான நாள்... நோ, நோ, செகன்ட் சந்தோஷமான நாள்... உன்னை கல்யாணம் செய்துக் கிட்ட நாள் தான் என் வாழ்க்கையில ரொம்பவுமே சந்தோஷமான நாள்...”
“மனோஜ்... சும்மா பொய் சொல்லாதீங்க...” என்று அவள் சிணுங்க...
“நிஜமா தான் சொல்றேன் pbs...” என அவன் செல்லம் கொஞ்ச...
“ப்ச்...” என அவள் அலுத்துக் கொள்ள...
“ஐ லவ் யூ pbs...” என சொல்லி அவள் உச்சி வகிட்டில் முத்தம் பதித்தான் மனோஜ்...
மஞ்சுவிற்கு சிலிர்த்தது... இந்த வார்த்தைகளில் அப்படி என்ன மாயஜாலம் இருக்கிறதோ தெரியவில்லை... ஒவ்வொருமுறை மனோஜ் அதை சொல்லும் போது அவளின் இதயம் துள்ளிக் குதித்தது... உடல் சிலிர்த்தது...
இன்னும் கொஞ்சம் வாகாக கணவனின் மார்பில் முகத்தை புதைத்துக் கொண்டு அவர்களுக்கே