(Reading time: 11 - 21 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

தொடர்கதை - உன்னருகே நான் இருந்தால்...  - 01 - பிந்து வினோத்

01. எந்தன் உயிரே எந்தன் உயிரே...

   

கம்பன் ஏமாந்தான் இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே.. கற்பனை செய்தானே.... கம்பன் ஏமாந்தான்......

  

பாரதியின் கைப்பேசி சத்தமாக அலறியது. யார் அழைப்பது என பார்த்து விட்டு, கைப்பேசியை எடுத்து பேசியவளை பார்த்து முறைத்தாள் அவள் அருகில் அமர்ந்திருந்த பவித்ரா. பாரதி போனில் பேசி முடித்தவுடன்,

  

"என்ன ரிங்டோன் பாரு இது?" என்றாள் பவித்ரா சற்று கோபமாக.

  

"ஏன் இதுக்கு என்ன குறைச்சல்... எனக்கு ரொம்ப பிடிச்ச பாட்டு... ரொம்ப கஷ்ட பட்டு கம்ப்யுட்டர்ல இருந்து எடிட் செய்து நானே அப்லோட் செய்தேன்..."

  

"சரி ரிங் வால்யூமாவது கொஞ்சம் கம்மியா வைக்கலாம் இல்லை...? எல்லா பசங்களும் திரும்பி பார்த்து சிரிக்கிறாங்க...." என அலுத்துக் கொண்டாள் பவித்ரா!

  

"இது சொன்னியே ரொம்ப சரி... நான் வால்யூமை வேணா குறைக்கிறேன்..."

  

சொன்னபடி கைப்பேசியை எடுத்து நோண்டிய தோழியை பார்த்து கோபத்தை மறந்து சிரித்தாள் பவித்ரா. அவர்கள் இருவரும் சென்னையை விட்டு ‘சற்று’ தள்ளி இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக பணி புரிகிறார்கள். இருவரும் கல்லூரி காலம் முதலே தோழிகள். முதலில் இந்த கல்லூரியில் பணிக்கு சேர்ந்தது பாரதி தான். இரண்டு வருடம் கழித்து, பவித்ரா திருமணமாகி மதுரையில் இருந்து சென்னைக்கு வந்த பின் அதிர்ஷ்டவசமாக அதே கல்லூரியில் ஒரு பணியிடம் காலியாக இருக்கவும், பவித்ரா வெற்றிகரமாக விண்ணப்பித்து அந்த வேலையில் சேர்ந்தாள். கடந்த மூன்று வருடமாக இப்படி காலையிலும் மாலையிலும் கல்லூரி பேருந்தில் கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயணம். ஆனால் தோழிகள் இருவருக்கும் தினமும் பேச ஆயிரம் விஷயங்கள் இருந்ததால் அலுக்கவில்லை.

  

அது மட்டும் அல்லாது, இந்த மூன்று வருடங்களில், பவித்ராவின் கணவன் ரமேஷை அண்ணா என்றும், ரமேஷின் தாயார் கமலாவை அம்மா என்றும் அழைக்கும் அளவிற்கு பாரதி

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.