(Reading time: 11 - 21 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

  

"பவி, நான் போய் பார்த்துப் பேசிட்டு வரேன்... நீ போ..." என்றாள் பாரதி.

  

"இல்லைடீ நானும் உன் கூட வரேன்... நீ தனியா போக வேண்டாம்..." என்றாள் பவித்ரா தயக்கத்துடன்.

  

"ஏன், அப்படி என்ன அந்த விவேக் சிங்கமா புலியா?? நான் தனியா போக பயப்பட?"

  

"நீ பயப்படுறேன்னு யார் சொன்னது? அந்த விவேக்குக்கு பாதுகாப்பா இருக்கும்னு தான் நானும் வரேன்னு சொன்னேன்...." என்றாள் பவித்ரா குறுநகையோடு.

  

பாரதிக்கும் சிரிப்பு வந்தது. எனவே தோழிகள் இருவரும் ஆஃபீஸ் ரூமை அடைந்து, அங்கே காத்திருந்த விவேக்கையும், அவன் அருகில் இருந்த மதுமதியையும் கண்டப் போதும் பாரதி முகத்தில் அந்த புன்னகை இருந்தது.

  

"இவங்க தான் சார் பாரதி மேடம்," என்று கோபால் விவேக்கிற்கு அறிமுகம் செய்து வைக்கவும், அவளை கூர்ந்து கவனித்தவனை, சலனம் இல்லாது நேராகப் பார்த்தாள் பாரதி.

  

அவன் முகத்தில் சிரிப்பின் சாயலே இல்லை... சரியான உம்மணாம் மூஞ்சி போலும் என நினைத்துக் கொண்டாள். சில வினாடிகள் சென்ற பின்னும், அவன் எதுவும் கேட்காது, அவளையே பார்த்த படி நிற்கவும், பொறுமையை இழந்து, தானே பேச்சை தொடங்கினாள் பாரதி.

  

"வணக்கம் சார்... உங்களையும் உங்க ஃபேமிலி பத்தியும் ரொம்ப கேள்வி பட்டிருக்கேன்... இதுவரை நேரா சந்திக்க வாய்ப்பு கிடைக்கலை... இப்போ உங்களை சந்திச்சதில சந்தோஷம்... சொல்லுங்க சார்... என்னை பார்க்கனும்னு சொன்னீங்களாமே?" என்று விஷயம் அறியும் ஆர்வத்தோடு வினவினாள் பாரதி.

  

அவன் முகத்தில் ஆச்சர்யத்திற்கான அறிகுறிகள் தோன்றியது... பின், அருகில் இருந்த தங்கையை சுட்டிக் காட்டி,

3 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.