டாக்டர் கீதாவின் எண் ரிங் போனதே தவிர யாரும் எடுக்கவில்லை.
இறுதியில், "The subscriber you are trying to reach is currently not able to accept your call. Please try again later" என்ற பதிவு செய்யப்பட்ட பெண் குரல் கேட்டது.
ஏமாற்றத்துடன் அருந்ததி ரீசிவரை கீழே வைக்கும் போதே,
"ஹேய் க்யூட்டி, சொல்லாமல் கொள்ளாமல் காலையிலேயே எங்கே போயிட்ட?" என்ற ராதிகாவின் உற்சாக குரல் கேட்டது.
அதே உற்சாகத்துடன் ராதிகா பக்கம் பார்த்த அருந்ததிக்கு ராதிகாவிடம் ஏதோ வித்தியாசம் தெரிந்தது. அவள் என்ன என்று ஆராய்ச்சி செய்ய,
"நான் இந்த மன்டே’வே வேலையில ஜாயின் செய்திருப்பேன். ஷிவா நீ இங்கேயே இருக்க போறேன்னு சொன்னதால உனக்கு கம்பனி கொடுக்க தான் நான் லீவ் எக்ஸ்டெண்ட் செய்தேன். நீ என்னடான்னா..." என பேசிக் கொண்டே போன ராதிகா அருந்ததியின் கேள்வி மின்னும் முகத்தை பார்த்து விட்டு,
"என்ன அப்படி பார்க்குற?" எனக் கேட்டாள்.
"இல்லை, உங்க கிட்ட என்னவோ இன்னைக்கு வித்தியாசமா இருக்கு... பியூட்டி பார்லர் ஏதாவதுப் போனீங்களா? ஃபேஷியல் ஏதாவது செஞ்சீங்களா என்ன?"
"நானா? நான் பியூட்டி பார்லர் பக்கம் கூட போனதில்லை. எப்போவாவது அம்மா கிட்ட பாலாடை வாங்கி முகத்தில போடறதோட சரி!"
ராதிகா பேசி முடித்த நேரம், கீழே இருந்து கௌஷிக்கின் குரல் கேட்டது.
"நான் ஹெல்ப் செய்றேன், நீங்க அங்கேயே வைங்க ஆன்ட்டி!"
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.