(Reading time: 5 - 9 minutes)
Unnaruge naan irunthaal
Unnaruge naan irunthaal

அவளின் கேள்வியை கேட்டு புன்னகைத்த விவேக்,

"ப்ச்... இல்லை... உங்களைப் பார்த்து வேற விஷயம் பேச தான் வந்தேன்... சாரி... சொல்லிட்டு வந்திருக்கனும்..." என்றான்.

"அது பரவாயில்லை... ஆனால் எதைப் பத்தி பேசனும்?"

"ஹ்ம்ம்ம்... கொஞ்சம் பர்சனல் விஷயம்... உங்களுக்கு பிரச்சனை இல்லைன்னா என்னோட வெளியே வர முடியுமா? பக்கத்தில ஏதாவது காஃபி ஷாப், இல்லை பார்க் ஏதாவது இருந்தால் அங்கே உட்கார்ந்து பேசலாம்..."

பாரதி விவேக்கை கேள்வியோடு பார்க்கவும்,

"கோவில் இருந்தால் கூட பரவாயில்லை... கொஞ்சம் அமைதியா பேச கூடிய எந்த இடமா இருந்தாலும் பரவாயில்லை..." என்றான் விவேக்.

"அவ்வளவு தானே சார்... அதுக்கு எதுக்கு எங்கே எல்லாமோ அலையனும்? எங்க ஹாஸ்டல் முன்னே இருக்க மரத்துக்கு அடியில இருக்கிற பெஞ்சிலேயே உட்கார்ந்து பேசலாமே..."

"சரி... ஓகே..."

"ஹ்ம்ம்ம்ம்... நீங்க அங்கே போய் இருக்கீங்களா? நான் ஒரு ரெண்டு நிமிஷத்தில வரேன்...” என்ற பாரதி, தொடர்ந்து, “இப்படி தலையை விரிச்சு போட்டுட்டு காளி ஆத்தா மாதிரி வந்தா நல்லா இருக்காது தானே..." என்று விவேக் கேட்கும் முன்பே காரணத்தையும் சொல்லி விட்டு மாடி ஏறிச் சென்றாள்.

புன்னகை மின்னும் முகத்துடன் ஹாஸ்டல் முன்பு இருந்த பெஞ்சில் அமர்ந்த விவேக், பாரதி வரும் வரை அதே புன்னகையோடு தான் இருந்தான். அவன் அமர்ந்திருந்த அதே பெஞ்சில் சிறு இடைவெளி விட்டு அமர்ந்த பாரதி,

3 comments

• 🌹 உன்னருகே நான் இருந்தால்...🌹

உங்கள் எழுத்தின் தீவிர ரசிகை நான்...

கை கொள்ளா பக்கங்களோடு உங்கள் எழுத்துக்களால் எங்களை வசியம் பண்றீங்க...

நான் படித்த நாவல்களில் யாரோட ஹீரோ உங்களுக்கு first பிடிக்கும்னு கேட்டால்... நான் பிந்து வினோத் ஹீரோன்னு சந்தோஷமா... சத்தமா... சொல்வேன்...

நான் இந்த நாவலை எத்தனை முறை வாசித்தேன்னு எனக்கே தெரியாது...

உறவுகளுக்குள் உள்ள அன்பை ரொம்ப அழகா சொல்வீங்க...

அதை வாசிக்கும் போது என் குணங்களில் உள்ள பிழைகளை நானே சரிசெயதிருக்கிறேன்...

உங்கள் பெயர் தாங்கிய புத்தகங்களை நூலகத்தில் பார்க்கும் போது இந்த சத்தம் தான் காதில் கேட்கும்...

😉 அது பம்பாய் படத்தில் அரவிந்தசாமி... மனீஷா... meet பண்ணும்போது வருமே... அந்த இசை... 😍😍😉 எனக்காக கேட்கறீங்களா...?

Leave your comment

In reply to Some User

Popular Reads

Recent Updates

Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.