மறந்து பேசிக் கொண்டிருந்தனர்.
மூன்று வருட காதலுக்கு பின் ஒரு வழியாக பெற்றவர்களின் சம்மதத்தையும் பெற்று நடக்கும் திருமணம்.
இரண்டு பெற்றோரும் தங்கள் வாரிசுக்காக அந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தாலும், அவர்களுக்கு முழு சம்மதமில்லை என்பதை ஒதுங்கி நின்ற அவர்களின் பாவம் காட்டியது.
ஆனால் ஷ்ரேயான்ஷும் ரச்னாவும் இது எதையும் கவனித்ததாகவே தெரியவில்லை. அவர்கள் வேறு ஏதோ தனி உலகத்தில் இருந்தார்கள்.
சாஸ்திர சம்பிரதாயப்படி சடங்குகள் நடக்க, திட்டமிட்டிருந்த முகூர்த்த நேரத்தில் திருமணம் நல்ல படியாக நடந்தது.
ரச்னா மிஸ்ஸர்ஸ் ரச்னா ஷ்ரேயான்ஷ் ஆக மாறிப் போனாள்.
***********
மேகமலை, திருநெல்வேலி
“ஏண்டா, கிளி மாதிரி வீட்டுல ஒருத்தி இருக்க உனக்கு எப்படிடா இந்த கோட்டானை போயும் போயும் பிடிச்சது?”
வீட்டுத் திண்ணையில் சேரில் அமர்ந்திருந்த ஹரியை பார்த்து கத்திக் கொண்டிருந்தாள் பொன்னம்மாள்.
“ஹேய் கிழவி, என்னை பார்த்தால் உனக்கு கோட்டான் மாதிரி இருக்கா? வாயை அடக்கிப் பேசு,” வீட்டின் முன் நின்றிருந்த அந்த இளம்பெண் ராகினி பொன்னமாளுக்கு போட்டியாக
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.