முகத்தில் மகிழ்ச்சி மின்னல்கள் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன.
யாருமில்லாமல் உறவினரோட ஒட்டிக் கொண்டு வாழ்ந்திருந்தவளுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா! அவளால் நம்பவே முடியவில்லை.
கணவனாக போகும் ஹரியின் மீது காதல், நன்றி, அன்பு என எல்லாம் பிரவாகமாக அவளின் மனதினுள் பொங்கிக் கொண்டிருந்தது.
ஆனாலும் சில நிமிடங்களில் அவளுக்கு கணவனாக போகும் ஹரியை நிமிர்ந்து நேராகப் பார்க்கவும் அவளுக்கு வெட்கமாக இருந்தது.
ஹரியின் பாட்டி பொன்னம்மாள் மேடையின் ஒரு ஓரத்தில் நின்றிருந்தாள். சிறு குழந்தை முதல் அவள் எடுத்து வளர்த்த அவளின் பேரன் தான் எவ்வளவு வளர்ந்து விட்டான்.
விசாலினி அவனுக்கு சரியான ஜோடி தான்.
இரண்டு பேரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என பிரார்த்திட்டபடி பொன்னம்மாள் இருக்க, சுபமுகூர்த்த நேரத்தில் விசாலினிக்கு தாலி அணிவித்து தன் திருமதியாக்கினான் ஹரி.
*************
மேயர் ராமநாதன் செட்டியார் கல்யாண மண்டபம், சென்னை.
கல்யாண மண்டபம் எங்கிலும் வெகு ஆடம்பரமாக திருமண ஏற்பாடுகள் நடந்துக் கொண்டிருந்தன.
ரச்னா பி.ஈ எம்பிஏ வெட்ஸ் ஷ்ரேயான்ஷ் எம்பிஏ என்று அன்றைய நாளின் நாயகன் நாயகியின் பெயர் தாங்கி இருந்த பெரிய அறிவிப்பு பலகை கண்ணை பறிக்கும் அலங்காரத்துடன் மின்னிக் கொண்டிருந்தது.
மணமேடையில் இருந்த ஷ்ரேயான்ஷும் ரச்னாவும் சுற்றி இருந்த நூற்றுக்கணக்கானோரை
Bindu Vinod has written more than 31 Tamil series in Chillzee and many more Novels in Chillzee KiMo.