தொடர்கதை - என் மேல் ஆசை இல்லையா? - 36 - நவ்யா
அதற்குப் பிறகு ஜனனி உற்சாகத்துடனே இருந்தாள். உமேஷும் கூட அழுது வடியாமல் பழைய மலர்ச்சியுடன் ஜனனி பின்னே சுற்றிக் கொண்டிருந்தான். அவர்கள் இருவரும் ரஜினி, முருகன், சுஜாதாவுடன் அரட்டை அடித்துக் கொண்டிருப்பதை சந்திரிகா அமைதியாக கவனித்தாள்.
ஜனனி உமேஷின் உறவு வழிமுறைகளை என்ன என்று எடுத்துக் கொள்வது என்று அவளுக்குப் புரியவில்லை. ஒரே நாளில் காதல், ஒரே நாளில் பிரிவு, இப்போது ஒரே நாளில் மீண்டும் இணைந்தும் விட்டார்கள்! ஏதோ அந்த அளவில் இருவரும் சண்டை என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்காமல் உடனே பேசி தங்களுக்குள்ளே சமாதானம் ஆகி விட்டார்களே!
குறிப்பாக ஜனனி மீது சந்திரிகாவிற்கு அதிக பரிவு ஏற்பட்டது. ஜனனி உமேஷ் மீதிருக்கும்
...
This story is now available on Chillzee KiMo.
...
றும் வீடியோக்களை பின்பற்ற தொடங்கி இருந்தாள். அதைக் குறித்து ஜனனியிடம் பேசி பாராட்ட வேண்டும் என்று முடிவு செய்துக் கொண்டாள்.
மனம் எல்லா விதத்திலும் தெளிவாகிவிடவும், சமையலறையில் இப்போதும் வேலையில் ஆழ்ந்திருந்த கணவரிடம், ‘பசங்களுக்கு பசிக்கப் போகுதுங்க,” என்று நினைவுப்படுத்தினாள்.
“அஞ்சே நிமிஷம்மா! ஆல்மோஸ்ட் எல்லாம் ரெடியா இருக்கு,” என்றார் பழனி.