(Reading time: 8 - 15 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 37 - சசிரேகா

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

   

தில்லையும் காபி குடித்துவிட்டு

   

”ஆஹா இந்த காபியை போல நான் வேற எங்கயுமே காபி குடிச்சதில்லை அமிர்தமா இருக்கு”

   

”இருக்கும் இருக்கும்” என கோபத்தில் முனகினான் சிவா, அதைக் கண்டுகொள்ளாமல்

   

”ஜனனி உன் கையால விசத்தை கொடுத்தா கூட அதுவும் அமிர்தமாயிடும் போல” என தில்லை சொல்ல அதுவரை அமைதியாக இருந்த சம்யுக்தாவோ சட்டென

   

”அதுக்கென்ன விசத்தையே கொடுக்க சொல்லவா” என காட்டமாக பேச திடுக்கிட்டான் தில்லை

   

”உனக்கேன் இவ்ளோ கோபம், எனக்கு விசத்தை கொடுத்து சாகடிச்சா உனக்கான நியாயம் கிடைக்காது பேசாம இரு” என சொல்லியவன் ஜனனியை பார்த்து சிரித்தான்

   

”ஜனனி” என அழைத்தபடியே அவளிடம் செல்ல குறுக்கே வந்து நின்றான் சிவா

   

”போதும் வந்த வேலையை மட்டும் பாரு, குழந்தையை கொடு” என அவனிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொள்ள தில்லையோ ஜனனியிடம் அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு

   

”ஜனனி எனக்கு வந்த கஷ்டத்தை பார்த்தியா, நேத்து ஒரே நாள்ல பல சம்பவங்கள் ஜனனி, ஏகப்பட்ட ஆட்களோட சண்டை போட்டதில உடம்பெல்லாம் வலி, ரத்தம் வேற வந்துடுச்சி, வலி தாங்கலை ஜனனி, உன்னாலதான் என்னை காப்பாத்த முடியும் என்னை நீ நல்லா பார்த்துக்குவல்ல” என அன்பாக கேட்க அவளோ சரியென்றாள் சிரித்தபடியே, சிவாவோ

   

”ஏன்டா டேய் எதுக்கு இவ்ளோ ஓவரா பேசற என்னவோ ஐசியுல அட்மிட் ஆனவன் கூட உன்னை மாதிரி பேச மாட்டான், அடிதானே பட்டிருக்கு என்னவோ உசுரே போற மாதிரி பேசி வைக்கற” என திட்ட அவனோ சிவாவை பார்க்காமல் ஜனனி முன்பே தன் சட்டையை கழட்டிவிட்டு நின்றான்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.