வரைக்குமா வருவீங்க, இவங்க டாக்டர் புரியுதா இவங்ககிட்ட போய் கொஞ்சி பேசறீங்க இது நல்லாவாயிருக்கு”
”இதப்பாரு சம்பந்தப்பட்ட இவளோட புருஷனே அங்க சும்மாதான் இருக்கான், என்னை தடுக்கலை, நீ ஏன் இப்படி குதிக்கற, உனக்கேன் பொறாமை, வேணும்னா நீயும் அப்படி உட்காரு, யார் வேணான்னு சொன்னா” என திட்ட ஜனனியோ
”தில்லை எதுக்கு இப்படி பேசற குழந்தையிருக்கா அமைதியா பேசு” என சொல்ல உடனே தில்லையும் அடங்கினான். கீதாவை பார்த்து
”சும்மா அவங்களோட பேசிக்கிட்டு இருந்தேன், நீ ஒண்ணும் பயப்படலையே”
”இல்லை”
”சமத்துக்குட்டி” என சொல்ல ஜனனியோ
”கீதா அப்பாகிட்ட போ”
”போ மாட்டேன்”
“கீதா” என அவள் சற்று அழுத்தி அழைக்கவும் அதில் கீதா உம்மென முகத்தை வைத்துக் கொண்டு சென்றாள். அதைக் கண்ட தில்லையோ
”ஜனனி குழந்தையை எதுக்காக இப்படி அதட்டற பாரு, அவள் முகமே மாறிடுச்சி”
”அவளுக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சி தில்லை, அவள் படிக்கனும்ல”
”ப்ச் ஒரு நாள்தானே”
“பரவாயில்லை வேற எங்க அடிபட்டிருக்கு காட்டு” என சொல்ல அவனோ சம்யுக்தாவை பார்த்து