(Reading time: 8 - 15 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

   

”சம்யுக்தா நீ கொஞ்சம் வெளிய போயேன்”

   

“ஏன் நான் ஏன் போகனும், நான் போக மாட்டேன்“

   

”நான் தப்பிச்சி எங்கயும் போக மாட்டேன், என்னை நம்பு, இப்ப கிளம்பு, வெளிய இரு, வரேன்”

   

”முடியாது” என சொல்ல ஜனனியோ சம்யுக்தாவை ஏற இறங்கப் பார்த்துவிட்டு தில்லையிடம்

   

”இவள்தானா அந்தப் பொண்ணு, நியாயம்கேட்டு வந்த பொண்ணு”

   

”ஆமாம் இவளேதான்”

   

”இவளை எதுக்காக உன்கூட கூட்டிட்டு சுத்தற”

   

”என் தலையெழுத்து, நான் எங்க கூட்டிட்டு சுத்தறேன், அவளாதான் வந்து என்கிட்ட நிக்கறா, போன்னு சொன்னா கூட போறதில்லை, இதே நீயிருந்தா எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கும் தெரியுமா”

   

”பேசாதடா இப்ப மட்டும் வக்கனையா பேசு, நானா வந்தப்ப வேணாம்னு சொன்னவன்தானே நீ”

   

”என்ன செய்றது ஜனனி, என் வாழ்க்கை அப்படி, நான் ஒரு தாதாவா இல்லாம இருந்திருந்தா சத்தியமா உன்னைத்தான் கல்யாணம் பண்ணியிருப்பேன், என்ன செய்றது இது காலத்தின் கட்டாயம் ஜனனி, காலத்தின் கட்டாயம்” என வருத்தமாக தில்லை சொல்ல ஜனனியோ

   

”அதுசரி ஒழுங்கா என்னையே நீ கல்யாணம் செஞ்சிருக்கலாம், பெரிசா தியாகி மாதிரி என்னை சிவாவுக்கு கல்யாணம் பண்ணி வைச்சிட்டு, தாதாவா மாறினல்ல, என்னிக்கு இருந்தாலும் உன்மேல எனக்கு கோபம் இருந்துக்கிட்டுதான் இருக்கும், கடைசி வரைக்கும் உன்னை நான் மன்னிக்கவே மாட்டேன் தில்லை” என்றாள் கோபமாக அவளின் அந்த கோபத்தை ரசித்தவன்

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.