”சாரி ஜனனி” என குழைவாக சொல்ல அவளோ சரியென தலையாட்டிவிட்டு
”நீ இங்க உட்காரு, நான் போய் மருந்து கொண்டு வரேன்” என சொல்லிவிட்டு உள் அறைக்குச் செல்ல பின்னாலே சென்றான் தில்லை. அதைக் கண்ட சம்யுக்தாவோ சிவாவை பார்த்தாள் அவனோ நொந்துப் போய் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான்
”அவரை தடுத்து நிறுத்தாம இப்படி உட்கார்ந்திருக்கீங்களே” என சம்யுக்தா கேட்க அதற்கு சிவா
”வேற என்ன செய்றது”
”என்ன செய்றதா, தில்லை ஒரு தாதா அவன் உங்க மனைவியை ஏதாவது செஞ்சிடப்போறான் போய் காப்பாத்துங்க” என சொல்ல அவனோ நொந்துப் போனான்.
அவனது செயலை தாங்க இயலாமல் சம்யுக்தாவே தில்லையை தேடிச் செல்ல, அங்கு படுக்கையில் படுத்திருந்தான் தில்லை, அவனுக்கு ஜனனி வைத்தியம் செய்துக் கொண்டிருந்தாள். அவனோ அவளிடம் அன்பாக பேச அதைக் கேட்டபடி அவள் சிரித்துக் கொண்டிருக்க குழந்தை கீதாவும் இன்னொரு பக்கம் அமர்ந்து நடப்பதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
”குழந்தை முன்னாடி எப்படி நடந்துக்கறாங்கன்னு பாரு, ஒருவேளை தில்லைகிட்ட மாட்டிக்க கூடாதுன்னு இப்படி சிரிச்சி பேசி வைக்கறாங்களா என்ன, இருக்கலாம் நாம போய் அவரை காப்பாத்தலாம்” என நினைத்து பதட்டமாக உள்ளே நுழைந்தாள்.
”எனன நடக்குது இங்க” என கத்த மகிழ்ச்சியாக இருந்த தில்லையோ சம்யுக்தாவின் கத்தலில் அவளை பார்த்து கோபமாக முறைத்தான்
”எதுக்கு இப்படி கத்தற, நானே ஏகாந்தமா இருந்தேன், அதை கெடுக்கறதுக்குன்னே வர்றியா நீ, வெளிய இரு இங்க வைத்தியம் நடக்குது முடிஞ்சதும் வரேன்”
”இது உங்களுக்கே ஓவரா தெரியலை, உங்க தாதாங்கற அதிகாரத்தை வைச்சி இப்படி பெட்ரூம்