”ஏன் சிவா உன்னை நல்லாதானே பார்த்துக்கறான்”
”இருந்தாலும் உன்னைப் போல வராதே” என்றாள், அந்நேரம் சிவாவே வந்து நின்றான்
”எவ்ளோதான் நான் உன் மேல அன்பு பொழிஞ்சாலும், உன்னால தில்லையை மறக்க முடியலைல்ல” என கோபமாக பேச அதற்கு ஜனனியோ
”பாப்பாவை ஸ்கூலுக்கு கூட்டிட்டுப் போங்க நேரமாச்சி”
”அதை சொல்லத்தான் வந்தேன்” என சொல்லியவன் தில்லையிடம் வந்தான்
”தில்லை சரக்கு பத்திரம், தேவையானப்ப கைமாத்திக்கலாம் சரியா”
”சரக்கு செமயா இருக்கு, ஒஸ்தியா என்ன”
”ஆமாம் அதுக்கு கெடிபிடி அதிகம், கைமாத்தற வரைக்குமாவது பத்திரமா வைச்சிக்க, கோடிக்கணக்கான சரக்கு பார்த்துக்கடா”
”நான் பார்த்துக்கிறேன்” என சொல்ல அதைக் கேட்ட சம்யுக்தாவோ சிவாவிடம்
”உங்களுக்கு என்ன பிரச்சனை, நீங்க நல்லாதானே இருக்கீங்க, வசதியான வீடு, நல்ல வேலை, டாக்டர் மனைவி, நிறைவான குடும்பம் இது போதாதா உங்களுக்கு, எதுக்கு இப்படி தப்பான வேலைகளை செஞ்சி பணத்தை சம்பாதிக்க நினைக்கறீங்க” என கேட்க சிவாவோ சிரித்துவிட்டு
”சில விசயங்களை நீ ஆராயாம இருக்கறது நல்லது சம்யுக்தா, இந்த காலத்தில யாருக்குத்தான் பணம் தேவையில்லை சொல்லு, இன்னிக்கு எனக்கு வேலையிருக்கு, நாளைக்கு அந்த வேலை என்னை விட்டு போயிடலாம், அப்ப நான் என்ன செய்றது குடும்பத்தை பார்த்துக்க வேணாமா”
”அதுக்காக தப்பான வேலைகளை செய்வீங்களா”