(Reading time: 7 - 13 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 17 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

த்தனையாவது முறை என்ற கணக்கே இல்லாமல் மீண்டும் அந்த ஃபோட்டோவையும், அதன் பின்னே எழுதி இருந்த வாக்கியத்தையும் படித்தான் மித்ரன்.

   

கோபியின் கையெழுத்தை பல பல அலுவலக பேப்பர்களில் பார்த்திருந்ததால், அது கோபியின் கையெழுத்து என்பது அவனுக்குப் புரிந்தது.

   

ஆனால் எதற்காக அந்த படத்தை திரும்ப திரும்ப பார்க்கிறான் என்பது மித்ரனுக்கே புரியவில்லை.

   

சரண்யாவை அவனுக்கு பிடிக்காது... கொஞ்சமும் பிடிக்காது, என்று சம்மந்தமே இல்லாமல் தனக்குத் தானே சொல்லிக் கொண்டான்...

   

ஆனாலும் அவனின் கைகளும், கண்களும் அதற்கு கட்டுப்பட மறுத்தது...

   

அந்த படத்தின் கூட இருந்த மற்ற பேப்பர்களை நோட்டம் விட்டவன், இந்த படம் கையில் இருந்தால் தானே இந்த குழப்பம் என யோசித்து, ஒரு முடிவுக்கு வந்தவனாக, ஃபோட்டோவையும், மற்ற பேப்பர்களையும் ஒரு ஃபைலில் வைத்து விட்டு, அதை கையில் எடுத்துக் கொண்டு நடந்தான்.

   

போகும் வழியில், உமாவிடம்,

   

“இன்னைக்கு இருந்த என்னோட மீட்டிங் எல்லாத்தையும் கேன்சல் செஞ்சு ஈமெயில் அனுப்பிடு,” என்று கட்டளை இட்டு விட்டு சென்றான்...

   

GSல் இருந்து கிளம்பிய மித்ரன் நேராக மைத்ரேயியின் ஃபோகஸ் எலக்டிரானிக்ஸின் முன் காரை நிறுத்தினான்.

   

செக்யூரிட்டி டெஸ்கில் இருந்த செக்யூரிட்டி அவனை இப்போது அடையாளம் கண்டுக் கொண்டு எழுந்து நின்று வணக்கம் சொல்ல, பதில் எதுவும் சொல்லாமல் நேராக தங்கையின் அறைக்கு சென்றான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.