“பாவம்ண்ணா சரண்யா... ஏன் அவளை இப்படி விடாமல் தொல்லை பண்ணுற??? அவ தான் எல்லா லீகல் பார்மாலிட்டிஸும் முடிச்சிட்டாளே,” என்றாள்.
“இது கம்பெனி பத்தி இல்லை மைத்தி... வேற விஷயம்,” என்றான் மித்ரன் எங்கேயோ பார்த்தபடி.
மைத்ரேயியிக்கு மித்ரனின் நடவடிக்கைகள் ஒன்றும் புரியவில்லை....
என்னவாகி விட்டது இவனுக்கு? என்று யோசித்தபடி, “அப்படி என்ன விஷயம்?” என்று விடாமல் கேட்டாள்...
“பெருசா ஒன்னும் இல்லை... உன் முன்னாடியே தான் அவக் கிட்ட பேச போறேன்... ஒரு அஞ்சு நிமிஷம்... அவ்வளவு தான்... நீ அவளை கூப்பிடேன்...”
மைத்ரேயி அமைதியாக நின்றாள்...
“மைத்தி... நான் சரண்யாவை ஹர்ட் செய்ற மாதிரி எதையும் சொல்ல மாட்டேன்... ஐ ப்ராமிஸ்... என்னை நம்பு,” என்றான் மித்ரன் மீண்டும் அமைதியான, கொஞ்சம் பரிவான குரலில்...
“சரி,” என்று முணுமுணுத்த மைத்ரேயி, அவளின் மேஜை மீதிருந்த ஃபோனின் ரிசீவரை காதில் வைத்து விட்டு, ஏதோ நம்பரை தட்டினாள்... பின் ,
“சரண்யா, என் ரூமுக்கு வர முடியுமா?” என்றுக் கேட்டாள்...
அந்த பக்கம் பதிலை கேட்டு விட்டு, “தேங்க்ஸ்,” என சொல்லி ஃபோனை கட் செய்து வைத்தாள்...
“சரண்யா வராளாம்...” என்ற மைத்ரேயியின் முகத்தில் எச்சரிக்கை செய்யும் பாவனை