Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 25 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
“அண்ட்... தி கோல்ட் மெடல் வின்னர் ஃபார் திஸ் இயர் இஸ் மிஸ். ரேஷ்மி கமல்....!!!!”
ரேஷ்மியின் பெயர் காதில் விழந்ததும் மாணவர்களுக்கு சர்டிஃபிகேட் வழங்கி கொண்டிருந்த ஹேமாவின் முகம் இன்னும் அதிகமாக மலர்ந்து பிரகாசித்தது! மாணவர்கள் மேடைக்கு வர என அமைக்கப் பட்டிருந்த படிகளை ஆர்வத்துடன் பார்த்தாள்...
ரேஷ்மி தன் துள்ளல் நடையுடன், பட்டமளிப்பு விழாவிற்கான உடையில் படிகளில் ஏறி வந்துக் கொண்டிருந்தாள்...
ஒரு வினாடி சுமித்ரா மீண்டும் உயிர் பெற்று தன் முன் வந்து விட்டதாக தோன்றவும் கண்களை விரித்து ரேஷ்மியையே பார்த்தபடி நின்றாள் ஹேமா!
ஹேமாவின் அருகில் வந்த ரேஷ்மி, அவளைப் பார்த்து கண்களை செல்லமாக சிமிட்டினாள். ரேஷ்மியின் ஒவ்வொரு அசைவிலும் தெரிந்த சுமித்ராவின் ஜாடையினால் தாக்கம் அடைந்தாலும், ஹேமாவின் முகத்தில் சிரிப்பும் தோன்றியது!
தங்க மெடலை பெருமை பொங்க ரேஷ்மிக்கு அணிவித்து விட்டு, “கங்க்ராட்ஸ் ரேஷூ,” என்றாள் ஹேமா.
“இது உங்க கைடன்ஸ்னால கிடைச்சது தான் ஆன்ட்டி... உங்களுக்கு தான் நான் தேங்க்ஸ் சொல்லனும்,” என்றாள் ரேஷ்மி உளம் நிறைந்த நன்றியுடன்!
“உன் அம்மா இருந்திருந்தா ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பா...”
ஹேமாவின் குரல் தளுதளுத்தது மட்டுமல்லாமல் அவளின் கண்களும் கொஞ்சமாய் கலங்குவதை கவனித்த ரேஷ்மி,
“ஆன்ட்டி, இன்னும் நிறைய பேருக்கு நீங்க சர்டிஃபிகேட் கொடுக்கனும், விஷ் செய்யனும்... இப்போ இப்படி எமோஷனல் ஆகாதீங்க... ஃபங்க்ஷன் முடிஞ்சப்புறம் நான் உங்க கார் பக்கத்துல வெயிட் செய்றேன்... அப்போ பேசலாம்,” என்றாள் தேற்றும் தோரணையில்!