(Reading time: 8 - 16 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

   

“க்கும்... இருந்தாலும் ரேஷ்மி கிட்ட ரொம்ப தான் செல்லம் கொஞ்சுறீங்கம்மா...”

   

“அப்படியா???”

   

“ஆமாம்... அவ சும்மாவே அறுந்த வாலு... நீங்க வேற எக்ஸ்ட்ராவா இப்படி செல்லம் கொஞ்னீங்க, அவ்வளோ தான்... அவளை கையிலேயே பிடிக்க முடியாது...”

   

“இது அவளுக்கு தெரியுமா???”

   

“யாருக்கு?”

   

“ரேஷ்மிக்கு தான்...”

   

“ஹையோ...! நான் இப்படி சொன்னேன்னு அவளுக்கு தெரிஞ்சா அவளோ தான்... ஏன்மா இப்படி ஒரு ஆசை உங்களுக்கு...”

   

“சும்மா தான் ஷ்யாம்... அங்கே பாரு உன் தங்கையும், நீ சொன்ன வாலும் மட்டும் இல்லை... அவளோட மொத்த குடும்பமே நிக்குது...”

   

அதை சொன்ன மறு வினாடியே ஹேமாவின் மனம் சுட்டது... அவளின் காருக்கு பக்கத்தில் அவளின் மகள் ராகவி, ரேஷ்மி, பூங்கோதை, கவிதா, விமல் மற்றும் ரோஷனி இருந்தார்கள்...

   

ஆனால் ரேஷ்மியின் அப்பா கமல் மட்டும் இல்லை...

   

“எனக்கு அப்புறம்... எப்போவாவது ஞாபகம் வரும் போதெல்லாம் அவர் கிட்ட பேசு... எப்படி இருக்கீங்க.... சாப்பிட்டீங்களான்னு கேளு....”

   

சுமித்ரா அவளிடம் கேட்டிருந்த இரண்டு உதவிகளில் ஒன்றை அவள் சரிவர செய்யவில்லை என்ற எண்ணத்தில் ஹேமாவின் மனதில் குற்ற உணர்வு ஏற்பட்டது...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.